பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா க ால்ன

புலர்த் தகைச் சாந்தம் புலர் தொறு தனைப்பக் கானா யாகலோ கொடிதே கடிமனைச் சேணிகந் தொதுங்கு மாணிழை யரிவை நீயிவனேரா வாயிற்கு நானுந் தந்தையொடு வருவோன் போல மைந்தனொடு புகுந்த மகிழ்நன் மார்பே'

என வரும்.

மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்-இவள் இழந்த மாட்சிமைப்பட்ட நலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலைவனை வேறுபடுத்தற்கண்ணும்:

'யாரை............நலந்தந்து சென்மே” (நற்றிணை 395) என வரும்,

'துண்ஞாண் வலையிற்......தொடுத்து' (ஐந். எழு. 65)

இதுவும் அதன்பாற்படும்.

ேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் - பரத்தை தலைவி யைப் பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின் கண்ணும் : தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும்.

'பொய்கை நீர் நாய்ப் புலவுநாறு இரும்போத்து" (அகம் 385)

இதனுள், யான் நினக்குத் தோழியா வேனெனப் பரத்தை தீவிய பேனா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு தான் நாணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க.

இன்னுத் தலைவனது பேனா ஒழுக்கத்திற்குத் தலைவி தானிய பொருளின் கண்ணுமெனவுங் கூறுக.

யாயா கியளே மா அ யோளே” (குறுந். 9) என வரும்.

இவை இரண்டும் பொருள்.

1. வகுத்தல்-பிரித்தல்; வேறுபடுத்துரைத்தல்.

2. பேனா ஒழுக்கம் என்பதற்குப் 'பரத்தை தலைவியைப் பேண்ாது ஒழுகிய ஒழுக்கம்’ எனப் பொருள் கொண்டார் கச்சினார்க்கினியம். கானுதல்: என்றது, தலைவனால் விரும்பப்பட்ட பரத்தை தன்னை மதியாது ஒழுகினம்ை கண்டு தலைவிகானுதலை