பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴፫ -፵ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

புணரார்-தலைவியரொடு தலைவனைக் கூட்டிப் புலநெறிவழக்கஞ் செய்யார் (எ .து. '. -

இரவும் பகலும் போர்த் தொழின் மாறாமை தோன்ற அரும் பாசறை யென்றார்.

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழி லே' எனவும், (பத்து. நெடுநல். 185.188)

'ஒருகை பள்ளி யொற்றி யொருகை

முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிது நினைந்து'

(பத்து-முல்லை. 75, 76)

எனவும் வருவனவற்றான் அரிதாக உஞற்றியவாறு 占了5京了五.

இனிக் காவற்பிரிவுக்கு முறைசெய்து காப்பாற்று தலை எண்ணுமெனப் பொருளுரைக்க." (五や)

ஆய்வுரை. இது போர்த தொழில் மேற்கொண்ட தலைமக் கட்கு உரியதோர் இயல்புணர்த்துகின்றது

(இ-ள்) பகைவரை வென்றடக்குதற்குரிய நெறிமுறைகளை ஆராய்தற்குரிய அரிய இடமாகிய பாசறையின்கண் மகளிரொடு உள்ளம் பொருந்தார் (தலைமக்கள்) எ-று.

போர்க்களத்தில் தம் படைமறவர்களும். யானை குதிரை யாகிய சேனைகளும் ஆற்றிய போர்ச் செயல்களையும். அவற்

1. எண்ணரும் பாசறை என்ற தொடருக்குப் பகை தணிவினையாகிய விரிவிற்கேற்ப உரையிற்பொருள் வரையப்பட்டது. இனிக் காவற்பிரிவிற்கேற்ப உரை வரையுங்கால், ‘முறை செய்து காப்பாற்றும் நெறிமுறைகளை எண்ணும் அரிய பாசறையிடத்து’ எனப்பொருளுரைக்க என்பதாம்.

2. பெண்ணொடுபுனரார்' என்ற தொடர்க்கு, "தலைவியரொடு தலை வனைக் கூட்டிப் புலனெறிவழக்கஞ்செய்யார்’ எனப் புலனுட்ைமாக்தர் செயலாகப் பொருள் கூறுவர் கச்சினார்க்கினியர். புணர்த்தல் - பாசறையிடத்துத்தலைவனுக் தலைவியும் உடனிருந்தாராகச் சேர்த்துச் செய்யுள் செய்தல். புணரார் . சேர்த்துச் செய்யுள் செய்யார். புணரார் என்னும் பயனிலைக்கு எழுவாயாக கல்லிசைப்

புலவர் என்பதனை இயைத்துப் பொருள்கொள்க.

ÉS தி