பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு శ్రీః

தன்னி னாகிய தகுதிக் கண்னும் புதல்வற் பயந்த புனிறுதிர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது” உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் உறலருங் குரைமையின் ஊடன்மிகுத் தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்னும் நின்றுநணி பிரிவின் அஞ்சிய பையுளுஞ் சென்றுகை இகந்துபெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடின் அச்சமுந் தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் உடன்சேறற் செய்கையொ டன்னவை பிறவும் மடம்பட வந்த தோழி கண்ணும்' வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும் மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங் காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிருஞ் சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் அருந்தொழில் முடித்த செம்மற் காலை

பா.வே.. 1. புதல்வர்ப்பயந்த புனிறு சேர். 2. துணையணைபுல்லிய புல்லாது. 3. உயங்கவள் 4. புல்கென 5. குண்மையின்,

6 பிரிவின் நீக்கிய 7. தோழிக்கண்ணும்.