பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு 9_ö

தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டு விடப்படுதல். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் அலர் அறிவுறுக்கப்பட்டு நீங்கி வரைந்தெய்துங்காறும் புணர்ச்சி வேட்கை யாற் செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கைதோற்றாமல் தளைக்கப்பட்டதனைத் தளை என்றலும் ஒன்று. இவை யிரண்டி னும் மிகுதி பொருளாகக் கொள்க.

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை 4 м а е е 4 9 - + м மாயோளே (அகம். அசு)

இதனுள் முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்தகாலை’ என்பதனால் இயற்கைப் புணர்ச்சி யின்மையும், “அகமலியுவகையளாகி முகனிகுத்து ஒய்யென விறைஞ்சி' என்பத னால் உள்ளப் புணர்ச்சி யுண்மையும் அறிக. பிறவும் அன்ன.

எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் என்பது?- ஒழியாத மகிழ்ச்சி மிக்கு வருங்காலத்துத் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு .

குனிகா யெருக்கின் குவிமுகிழ் விண்டலொடு பணிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித் தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட்டு ஊரும் மடவோன் உலர்வன் கொல்லென நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் திரங்கினும் உணரா ளுர்தோ றணிமடற் கலிமா மன்றத் தேறித்தன் அணிநலம் பாடினும் அறியா ளென்றியான் பெருமலை நெடுங்கோ டேறிப் பெறுகென்று உருமிடித் தீயின் உடம்புசுடர் வைத்த

1. தளை-கட்டு, கெஞ்சத்திற்கு அமைந்த தளையாவது, தலைவன் தலைவியிருவர் மாட்டும் கிளர்ந்து மீதுசர்ந்த வேட்கை தலைவனுக்குரிய பெருடிை வும் உரனும் காரணமாகவும் தலை விக்கு உரிய அச்சமும் கானும் மடனுங்காரன மாகவும் இருவரும் வரைந்து எய்துமளவும் புறத்தே வெளிப்படாமல் இருவருள்ளத் தும் கட்டுப்பட்டு அடங்குதல். கெஞ்சு தளை அவிழ்தலாவது, இருவரும் உலகத் தாரறிய மணந்து கொண்டு கூடும் கிலையில் கெஞ்சம் கட்டவிழ்ந்து வேட்கை வெளிப்படுதல்.

2. எஞ்சாமை-ஒழியாேை. இறந்துவருதல்-மிக்குத்தோன்றுதல்.