பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு உஆம்

"ஆள் வழக்கற்ற......மறந்தே (அகம் நிக) எனவரும்,

சென்று கையிகந்து பெயர்த்துள்ளிய வழியும் என்பது - மேற்கூறியவாறினைக் கையிகந்து முன்னொருகாற் சென்று

மீட்டும் அந்நெறியினைப் போக நினைந்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு.

இருங்கழி முதலை...... ஞான்றே. (அகம்.கூ) எனவரும்.

காமத்தின் வலியும் என்பது- பொருளினுங் காமம் வலி புடைத்து என உட்கொண்ட வழியும் கூற்று நிகழும் என்றவாறு.

விரிதிரைப் பெருங்கடல்...... வைகலோ.ெமக்கே". (குறுந்.

க0க) எனவரும்.

கைவிடின் அச்சமும் என்பது-தலைவியைக் கைவிட்டவழி அவளது உயிர்ப்பொருட்டு அஞ்சுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

'அளிநிலை பொறாஅது...... பிரிது நாமெனினே’ (அகம்.கு) என வரும். - - -

தானவட்பிழைத்த நிலையின்கண்ணும் என்பது-தலைவன் தலைவியை நின்னிற் பிரியேன் என்ற சொல்லிற் பிழைத்த நிலையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு பிழைத்தலாவது பிரிதல்.

வயங்குமணி'......பொதியிலானே' (அகம்:ககள்) எனவரும் .

உடன் சேறற் செய்கையொடு என்பது-உடன்போகவேண்டு மெனச் சொல்லியவழியும் என்றவாது. ஒடு எண்ணின் கண் வந்தது.

"செருமிகுசினவேந்தன்” என்னும் பாலைக் கலியுள்,

جہد ------سvد*

1. மேற்கூறிய ஆறின்ைக் கையிகக்து.மேத்குறித்த் கடத்தற்கரிய வழி வினைக் கடந்து.