பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா ரு |్క ?

இதனுள் மனைவி அமைந்துநின்ற இல்நிலையே? இல்லற மாவதெனவே யாம் முன்னரொழுகிய ஒழுக்கமும் இத்துணை தன்மையாயிற்று என்றானாயிற்று. இது குறிப்பெச்சம்.

நாமக்காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் (தோழி நாமக்காலத்து ஏமுறு கடவுள் உண்டென ஏத்திய மருங்கினும்) - தோழி இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக்காலத்தே யாம் வருந்தாதிருத்தற்குக் காரணமாயதோர் கடவுள் உண்டு எனக்கூறி அதனைப்பெரிதும் ஏத்திய இடத்துத் தலைவன் வதுவைகாறும் ஏதமின்றாகக் காத்த தெய்வம் இன்னும் காக்குமென்று ஏத்துதலும்;

ஆதிதி,

"குனிகர் பெருக்கின் குவிமுகிழ்......

தாமரை முகத்தியைத் தந்த பாலே. ’’

என்னுங் குணநாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலாது,

  • நேரிழாய் நீயும் நின் கேளும் புணர

வரை புறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தpஇயாம் ஆடக் குரவையுள் கொண்டு நிலைபாடிக் காண்” {கவி,39)

எனத் தான் பராய தெய்வத்தினைத் தோழி கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனும் ஏத்து 3560 rriffs.

அதிரிசை அருவி அருவரைத் தொடுத்த பஃறேன் இறாஅல் அல்குநர்க் குதவும் நுந்தைநன் னாட்டு வெந்திறன் முருகென

1. இங்கிலையே. பா. வே.

2. இங்கு மேற்கோளாகக் காட்டப்பெறும் குணநாற்பது என்னும் நூல் கண் வன் மனைவி என்னும் இருவரது அன்பின் வழிப்பட்ட இல்லறப்பண்பினை எடுத் துரைக்கும் காற்பது பாடல்களைத் தன்னகத்தேகொண்ட இலக்கியம் எனக்கருத வேண்டியுளது.