பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2.

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

"ஆள் வழக் கற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை யருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறு தரு வதுகொல் தானே செறிதொடி

கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டவென் உரங்கெழு நெஞ்சே."

(ஐங்குறு. 328)

இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன் உழையர்க்கு

உரைத்தது.

"நெடுங்கழை முளிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யினியே பொண்ணுத லரிவையை யுள்ளுதொறுந் தண்ணிய வாயின சுரத்திடை யாறே.’’ (ஐங்குறு 322)

இஃது இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது

இன்னும் இரட்டுறமொழித லென்பதனாற் செய்வினை முற்றி மீண்டு வருங்கால் வருந்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது,

"என்று கொல் எய்தும் ஞான்றே சென்ற வளமலை நாடன் மடமகள் இளமுலை ஆகத் தின்னுயிர்ப் புணர்ப்பே'

'கொல்வினைப் ...... சென்றவெ னெஞ்சே' (அகம், 9)

என வரும். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண்

அடக்குக.

1. மீட்டு வரவு ஆய்ந்தவகை' என்பதற்கு மீண்டும் வருதலை ஆராய்க்த

கூறுபாடு என முதற்கண் உரை வரைந்த கச்சினார்க்கினியர், இரட்டுற மொழித

லால் செய்வினைமுற்றி மீண்டு வருங்கால் வருந்தி கெஞ்சொடு கூறுவன என மற். றொரு பொருள் கொண்டார். இப்பொருளுக்கு ஆய்ந்த வருந்திப் எனப் பொரு ஆரைக்க.