பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரக்

நிறுத்தற் கண்ணும்' என்பது. தலைவனது பண்பினைத் தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறு தற்கண்ணும் என்றவாறு.

'முடவுமுதிர்......இனியனால் எமக்கே” (அகம், கடுஉ} கான வரும்.

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் என்பது-தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன் மாட்டுப் பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற். கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே' (குறுந் ங்) சன வரும.

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெரு கிய காமத்து மிகுதியும் என்பது-தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும்

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

தணந்தனி ராயின் எம் இல்லுய்த்துக் கொடுமோ

அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்

கடும்பாம்பு வழங்குந் தெருவில்

நடுங்களுர் எவ்வங் களைந்த எம்மே” (குறுந் கூடுசர் எனவும்,

'என்கைக் கொண்டு தன் கண் ஒற்றியுந்'

தன்கைக் கொண் டென் நன்னுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் கள்வர் போலக் கொடியன் மாதோ...... கோடுயர் பிறங்கல் மலைகிழவோனே' (நற்றிணை வே.அ) எனவும்,

1. சிறுத்தல் - தடுத்துகிறுத்துதல், அஃதாவது தோழி உயாத்துக் கூறியதனை மறுத்துரைத்தல்.