பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா கூ அசு

என்னையுந் தன்னோடொப்பித்துத் தன் பெரிய நலத்தாலே மாறுபடுமென்பவென அவள் நலத்தைப் பாராட்டியவாறும். நீ பசப்பித்தோர் வண்டு தாது உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க,

'அணிற்பல் லன்ன” (குறுந் , 49) என் னும் பாட்டுக் கற் பாகலின் இதன்பாற்படும்.

கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக் காய்தலும உவத்தலும் பிரித்த லும் பெட்டலும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும்: கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை - பரத்தையிற் பிரிவும் ஏனைப்பிரிவுகளும் ஆகித் தலைவன் சண் நிகழுங் கொடுமை யொழுக்கத்தில் தோழி கூறுவதற்கு உரியளென மேற்கூறுகின்ற வற்றைக் கேட்டவழி; வடுவறு சிறப்பிற் கற்பில திரியாமை எஞ்ஞான்றுங் குற்றமின்றி வருகின்ற பிறப்பு முதலிய சிறப் பிடத்துங் கற்பிடத்துந் திரிவுபடாதபடி காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் நிலையினும்-தோழி கூற்றினை வெகுள லும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் பின்னும் அவள் கூற் றினைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய நிலையின் கண்ணும்; ஆவயின் வருஉம் நிலையினும்.அத்தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலை யின் கண்ணும்; பல்வேறு நிலையினும் . இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பல்வேறுபட்டு வரும் நிலையின்கண்ணும் :

அவள் வயி னென்னாது ஆவயி னென்றார், தோழியும் பொருளென்பதுபற்றி.

1. 'கொடுமையொழுக்கம் தோழிக்குரியவை’ என்றது, தலைவனது கொடுமையொழுக்கத்தில் தோழி கடறுவதற்கு உரியவாக இவ்வியல் 9 ஆம் சூத்திரத்திற் கூறப்படும் கூற்றுக்கள்.

வடுவறு சிறப்பிற்றிரியாமை, கற்பிற்றிரியாமை என ஈரிடத்தும் இயைத் தும், பிரித்தலும் பெட்டலும் நிலையினும் ஆவயின் வரூஉம் நிலையினும் என இயைத்தும் பொருள் வரையப்பட்ட து.