பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 13;

   தோன்றும் என்பதனால் இயல்பாய்த் தோன்றி நின்றனவும் இம்முறையே திரிந்து மெல்லெழுத்தாகும் என்பதாம்.
   (உ-ம்) மரம் + குறிது = மரங்குறிது சிறிது, தீது, பெரிது

எனவரும்.

   அன்ன மரபின் மொழியன்மையின் விளக்குறுமை என் புழி மெல்லெழுத்து மிகாதாயிற்றென்பர் இளம்பூரணர்.
     ஞநம யவவெனு முதலாகு மொழியும் 
     உயிர்முத லாகிய மொழியு முளப்பட 
     அன்றி யனைத்தும் எல்லா வழியும் -
     நின்ற சொன்முன் இயல்பா கும்மே. (தொல். 144)
   இஃது இருபத்துநான்கு ஈற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்கட்கு இரு வழியும் வருமொழி முடிபு கூறுகின்றது.
   (இ-ள்) ஞநமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்கும் சொற்களும் உயிரெழுத்து முதலாய் நிற்கும் சொற்களும் ஆக அவ்வனைத்தும், அவ்வழியும் வேற்றுமையு மாகிய எல்லாவிடத்தும் இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயராகிய நிலைமொழி முன்னர்த் திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் என்பதாம்.
   “எகர வொகரம் பெயர்க்கு ஈறாகா (272) என மேற் கூறுவாராதலின், உயிரீற்றின்கண் எகர ஒகரம் ஒழிந்தன கொள்க. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறியதென்று உணர்க.
   ‘எல்லாம்’ என்றதனால் ஒற்றிரட்டுதலும், உடம்படுமெய் கோடலும், உயிரேறி முடிதலும் எனவரும் இக் கருவித்திரிபு திரியெனப்படா வென்பர் இளம்பூரணர். எனவே இவை முற்கூறிய மேற் பிறிதாதல், மிகுதல் குன்றல் என்ற மூன்று திரிபினுள்ளும் அடங்கா என்பது அவர் கருத்தாதல் புலனாம். 
   
   நன்னூலார், மெய்யீற்றின்முன் மெய்யூர்ந்தும் உயிரீற்றின் முன் உடம்படுமெய் பெற்றும் புணருமியல்பினதாய உயிர்முதன் மொழியைக்கூறாது, ஏனை மென்கணமும் இடைக்கணமும் எல்லாவற்றின் முன்னரும் இயல்பாய் வரும் என்பதனை,
     எண்மூ வெழுத்திற் றெவ்வகை மொழிக்கும் 
     முன்வரு ஞநமய வக்க ளியல்பும்