பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


லெடுத்தாளற்குரிய சொற்கள், ஆரிய மொழிக்கேயுரிய சிறப்பெழுத்தின் நீங்கி, இருமொழிக்கும் உரிய பொதுவெழுத்தான் இயன்றனவே யென்பதனையும் வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தானாய சொற்கள் சிதைந்து தமிழொலிக்கு இயையத் திரிந்துவருமாயின் அவையும் விலக்கப்படாவென்பதனையும்,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” ‘சிதைந்தன வரினு மியைந்தன வரையார்’

- (தொல்-எச்சவியல், ரு. சு) என்ற சூத்திரங்களாற் குறிப்பிட்டார் ஆசிரியர் தொல்காப்பியனார். -

தொல்காப்பியமென்னும் இந்நூலைச் சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கிய பிண்டமாக ஆசிரியர் கொண்டுரைக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம். பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டு ஒவ்வோரதிகாரமும் ஒன்பதொன்பதியல்களாற் பிரித்துரைக்கப்படுகின்றது. -

இந்நூல் முழுவதற்கும் முதன் முதல் உரை செய்தவர் உரையாசிரியரெனப் புகழப்படும் இளம்பூரணர் ஆவர். இவருரையைத் தழுவி, வேறுபடுமிடங்களிற் புத்துரை கூறிச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர், கல்லாடர், தெய்வச் சிலையார் என்னும் மூவரும் வேறுவேறு உரை செய்துள்ளனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவ்விளம் பூரணருரையைத் தழுவி இந்நூன் முழுவதற்கும் உரை செய்துள்ளார். பேராசிரியர் சொல்லதிகாரத்திற்கும், பொருளதிகாரத்தில் மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு ஆகிய நான்கியலுக்கும் உரை செய்தன ரென்பர். இவற்றுள் சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியவுரை கிடைக்கவில்லை.

 தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட இந்நூலின் இலக்கணங்கள் பலபடப்பரந்து கிடத்தலான் பிற்காலத்தில் மாணாக்கரானும் பிறரானும் பயிலப்படாது போகவே தமிழிலக்கண விதிகளை யாவரும் அறிதலியலா தாயிற்று. கி.பி. 1178 முதல் 1216 வரையரசாண்ட மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தவனான அமராபரணன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சீயங்கனென்னும் அரசன் சனகாபுரத்துச் சன்மதி முனிவரின் புதல்வராகிய பவணந்தியாரை நோக்கித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுப் பரந்துகிடந்த ஐந்திலக்கண விதிகளை யாவரும் வருத்தமின்றி அறிந்து கொள்ளும்படி தொகை வகைவிரியாற் சுருக்கி ஓர் இலக்கண நூலாகச் செய்து தரும்படி வேண்டினன் என்பதும், அவ்வாறே அவன் வேண்டுகோள் கொண்டு பவணந்தியாரும் முன்னோர் நூலின் வழியே நன்னூல் என்ற பெயரால் நன்னூலாகிய இந்நூலைச் செய்தளித்தனரென்பதும்,

“சொல்காப்பியத்தின் குனதோடந் தேர்ந்து சொலுவதற்குத் தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை ஒல்காப் பெரும்பவ ணந்தீயென்றோதி யுபகரித்த வல்காவலன் சீய கங்கனுந் தான்கொங்கு மண்டலமே

என்ற கொங்குமண்டல சதகத்தாலும் ‘மலர்தலையுலகில் என்று தொடங்கும் இந்நூற்பாயிரத்தாலும் புலனாம். எனவே பவணந்தியாராற் செய்யப்பட்டநன்னூல் என்னும் இலக்கணநூல் தொல்காப்பியத்தின் வழிநூலாதல் பெறப்படும்.

நன்னூலுக்கு முதன்முதல் உரை செய்தவரான மயிலைநாதர், “பழையன. கழிதலும் எனவரும் அந்நூற் புறனடைச் சூத்திரத்திற்கு “இந்நூலிற்சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதொரு புறனடையுணர்த்துதல் நுதலிற்று. இவ்வாறு மேல்வரும் அதிகாரங்களிலும் கண்டுகொள்க’ எனக் கருத்துரை கூறுதலாலும், “நுதலியபொருள் அரும்பொருளைந்தென உணர்த்தினமையின் இந்நூலிற் கூறிய பொருள் யாப்பு அணி என்னும் ?rs 2/