பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 237

   (உ-ம் ஐந்துக்கலம் - ஐங்கலம், சாடி, தூதை, பானை எனவும் ஐந்து+கழஞ்சு - ஐங்கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும்.
       கசதப முதன்மொழி வரூஉங் காலை.      (தொல்.449)

   இது மேற்கூறிய மூன்றற்கும் வருமொழி வரையறுக்கின்றது. 
   (இ-ள்) மேற்கூறியவாறு மூன்றனொற்று வந்த வொற்றாய்த் திரிதலும், ஐந்தனொற்று மெல்லெழுத்தாதலும், அளவுப்பெயர் நிறைப்பெயர்கட்கு முதலாம் ஒன்ப தெழுத்துக்களினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழியாய் வந்த விடத்தாம்

எ-று.

       (உ-ம்) அறுகலம், சாடி, துரதை, பானை எனவும்
               அறுகழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். 
   நமவ என்னும் மூன்றொடு சிவணி 
   அகரம் வரினும் எட்டன்மு னியல்பே.     (தொல்.450) 
  இச்சூத்திரம் ஞ ந ம ய வ வெனும் (எழுத்து 144) என்ற சூத்திரத்துப் பொது விதியின் அடங்குவனவற்றை வேறோர் பயனோக்கி விளங்கக் கூறியதாகலின், இது வேண்டா கூறி வேண்யது முடித்தல் நுதலிற்றென்பர் உரையாசிரியர்.
   (இ-ள்) அளவிற்கும் நிறைக்கும் முதலாமெனப்பட்ட நமவ என்னும் மூன்றனோடு பொருந்தி அகர முதன்மொழிவரினும் முற்கூறியவாறே எட்டென்பதன் டகாரம் ணகாரமாய் வேறோர் விகாரமின்றி இயல்பாய் முடியும் என்பதாம்.
  இவ் வேண்டா கூறலால் எண்ணகல் என ஒற்றிரட்டுதல் கொள்ளப்பட்டது.
 (உ-ம்) எட்டு+நாழி = எண்ணாழி, மண்டை, வட்டி, அகல் எனவரும்.
   உம்மையான் உயிர்க்கணத்து உகர முதன்மொழிவரினும் வல்லெழுத்துவரினும் எண்ணுழக்கு, எண்கலம் சாடி, தூதை, பானை என இயல்பாய் முடிதல் கொள்க.
        ஐந்தும் மூன்றும் நமவரு காலை 
        வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே.       (தொல்.45) 
   இதுவும் மேல் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது. 
   (இ-ள்) ஐந்து, மூன்று என்னும் எண்ணுப்பெயர்கள் நகரமுதன்மொழியும் மகர முதன்மொழியும் வருங்காலத்து