பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தொல்காப்பியம்-நன்னூல்


ருரைத்த சார்பெழுத்தென்றதன்கண் உயிர்மெய் அளபெடை முதலியனவுஞ் சேர்த்து,

உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள பஃகிய இஉ ஐஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும். (நன். 50,

என்பதனாற் சார்பெழுத்துப் பத்தெனக் கூறி,

உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு முன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஒளகா னொன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா ணென்ப. (நன். 61)

என்பதனால்,

உயிர்மெய் 246

முற்றாய்தம் . 8

உயிரளபெடை 2:

ஒற்றளபெடை 42

குற்றியலிகரம் 37

குற்றியலுகரம் 35

ஐகாரக் குறுக்கம் 3

ஒளகாரக் குறுக்கம் 1

மகரக் குறுக்கம் 3

ஆய்தக் குறுக்கம்2

ஆக சார்பு 369

என விரித்துக் கூறியுள்ளார்.

 “முதலெழுத்தாந்தன்மை அவற்றிற்கின்மையானும் சார்பிற் றோன்றுதலானும் இப்பத்துஞ் சார்பாகவே கொள்ள வேண்டுமென்பது” என மயிலைநாதரும், “உயிர்மெய் உயிரும் மெய்யுங்கூடிப் பிறத்தலானும் ஆய்தம் உயிர்போல அலகு பெற்றும் மெய்போலப் பெறாதும் ஒரு புடையொத்து அவற்றினிடையே சார்ந்து வருதலானும், ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தாற் பிறத்தலானும்