பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தொல்காப்பியம்-நன்னூல்



பாடின்றி யனையுமாம்” என மாபுராணத்துங் கூறப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.

 கூட்டியெழுஉதல் என்பதற்கு “கூட்டியெழுப்புக” என முன்னையோருரைத்த வழியே பொருள் கொள்ளாது, கூட்டியெழுதுக’ எனப் பொருள் கொள்வாருமுளர். “எழு” என்ற தன்வினைப்பகுதி இறுதியுகரம் நீண்டு அளபுபெற்று நின்றதாக லின், எழுதுக’ என எழுது என்பதனைப் பகுதியாய் வைத் துரைத்தல் பொருந்தாது அன்றியும் இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து ஓசை குன்றுவதான சொல்லின் கண் மூன்று மாத்திரையாய் நின்று ஒசை பெறவேண்டின் அதனோடு ஒத்த குற்றெழுத்து அதன் பின்னர் நின்று அதன் ஓசையை நிறை விக்கும் என்ற அளபெடைச் சூத்திரத்தோடு இது மாறுபட்டு, வரிவடிவில் இனவெழுத்தை அறிகுறி அளவாகக் கூட்டி எழுதுத லொன்றே ஒசைநீடற்குரிய வழியாம் எனப் பொருள் தந்து ஆசிரியர் கருத்தை மயங்க வைப்பதாகும்.
      கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை 
      நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே. (தொல், 7)
  இது, மேல் எழுத்தெனப்பட்டவற்றுள் குற்றெழுத்து நெட்டெழுத்து எனப் பெயர் கூறியவழி உடம்பொடு புணர்த்தலான் அவற்றளபாக மாத்திரையும் கூறப்பட்டதாகலின் இயைபு பட்டமை கருதி மாத்திரை இன்னதென அதன் அளவு கூறுகின்றது.
  (இ-ள்) கண்ணிமைத்தலும், கைந்நொடியும். ஆகிய அவையே ஒரு மாத்திரைக்கு அளவாகும். இது நுண்ணிதாக ஓசை யியல்பினை யுணர்ந்த ஆசிரியர் கண்டநெறி எறு.
  ஈண்டு இமையென்றது இமைத்தற்றொழிலை யெனவும் நொடியென்றது நொடியிற் பிறந்த ஒசையை யெனவும் உரையாசிரியர் கூறுவர்.
  கண்ணிமைத்தலும் நொடியோசையும் இங்கு இயற்றமிழாசிரியர் எழுத்தோசையின் எல்லையாக அமைத்துக் கொண்ட ஓரளபிற்கு (ஒரு மாத்திரைக்கு) அளவாதல் கூறப்பட்டது.
  பின்னர், மெய் முதலியவற்றிற்கு அரையளபு எனக் கூறப் படும் அளவு, இதனிற் பாதியாதலும், மகரக் குறுக்கம் முதலிய வற்றிற்குக் கூறப்படும் அளவு இப்பாதியிற் பாதியாதலுமுணர்க.