பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் 1985 முதல் 1937 வரை யான் தமிழாராய்ச்சி மாணவனுக இருந்தபொழுது இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் அதன்வழி நூலாகிய நன்னூலிலும் கூறப்பெற்றுள்ள எழுத்திலக்கண விதி களே ஒப்புநோக்கி ஆராய்ந்து தொல்காப்பியம்.நன்னூல். எழுத்ததிகாரம்’ என்னும் ஆராய்ச்சியுரையினை எழுதும் பணியினை என் பேராசிரியப் பெருந்தகை நாவலர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எனக்கு அன்புடன் வழங்கினர்கள். அப்பொழுது எழுதப்பெற்ற தொல்காப்பியம்-நன்னுரல்-எழுத்ததி கார வுரைப் பகுதி அண்ணுமலேப்பல்கலைக்கழகத்துணரில் 1941முதல் தொடர்ந்து வெளி வந்தது . அவ்வுரைப் பகுதி 1962-ல் அண்ணுமலைப்பல்கலைக்கழகத்தின் சார்பில் நூலுருவாக வெளி வந்தது. அதனைத் தொடர்ந்து தொல்காப்பியச் சொல்லதிகாரத் தையும் நன்னூற் சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து வெளியிடுதல் வேண்டும் என அன்பர் பலரும் விரும்பியதற்கு ஏற்ப அவ்வப்பொழுது தொகுத்த குறிப்புக்களே அடியொற்றித் தொல் காப்பியம்-நன்னூல்-சொல்லதிகாரம் என்னும் இவ்வுரை நூல் வெளியிடப் பெறுகின்றது . அச்சிடுதற்கு ஏற்ற வண்ணம் இந்நூலேப் படியெடுக்கும் பணி என் மகள் செல்வி. திரு. மங்கையர்க்கரசியால் திருத்தமுறச் செய்யப்பெற்றது. அண்ணுமலேப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் டாக்டர் சோ. ந. கந்தசாமி, M.A., Ph.D. sisust 356ir இந்நூலின் திருத்தப்படிகளை ஒப்பு நோக்கித் திருத்தியுதவி ஞர்கள். இவர்களுக்கு இறைவன் திருவருளால் எல்லா நலங்களும் உளவாதல் வேண்டும் என உளமார வாழ்த்துகின்றேன்.