பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? (இ-ள்) ஆரும் வேற்றுமைப் பொருள்மேல் வரும் உயர் திணைத் தொகைக்கண் உருபு விரிப்புழி அதுவென்னும், உருபு கெட அதன் பொருட்கண் நான்காமுருபு வரும். எ-று. அதுவெனுருபு கெடுதலாவது அவ்வுருபு அங்கு வாராமை. உயர்திணைத் தொகைவயின் அதுவெனுருபு கெடக் குகரம் வரும் எனவே அதுவுருபு அஃறிணைப்பால் தோன்ற நிற்றல் பெறப்படும். (உ.ம்) நம்பி மகன், நங்கை கணவன் என்னும் உயர் திணைத் தொகைகளை விரிப்புழி நம்பிக்கு மகன், நங்கைக்குக் கணவன் என நான்காம் வேற்றுமையுருபு வந்தவாறு காண்க. கூடு. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னன. இஃது இரண்டாவதும் மூன்ருவதும் மயங்குமாறுணர்த்து கின்றது . (இ-ள்) தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு இரண்டாவதும் மூன்ருவதும் விலக்கப்படா; அவ்வேற்றுமை தொக அவற்றின் பொருள் நிற்கும் தொகையிடத்து. எ-று. தடுமாறு தொழிலாவது, தனக்கு முன்னின்ற பெயர்க்கே யுரித்தாய் நில்லாது ஒருகால் தனக்குப் பின்னின்ற பெயரோடுஞ் சென்று இயையும் நிலேயில் அமைந்த தொழில். அத்தொழி லொடு தொடர்ந்த பெயர் தடுமாறு தொழிற்பெயர் எனப்படும். (உ-ம்) புலி கொன்ற யானை, புலிகொல் யானே என்புழிக் கொல்லுதற்ருெழில் முன்னின்ற புலிக்கேயுரியதன்றி ஒருகால் யானைக்கும் உரியதாய்த் தடுமாறும் நிலையில் அமைந்தமையின் அத்தொழில் தடுமாறு தொழிலாயிற்று. அத்தொழிலொடு நிஜல மொழியாய்த் தொடர்ந்து நின்ற புலி என்னும் பெயர் தடுமாறு தொழிற் பெயர் எனப்பட்டது. புலி செயப்படுபொருளாயவழி *புலியைக் கொன்ற யானை, எனவும், புலி வினைமுதலாயவழி புலியாற் கொல்லப்பட்ட யானே? எனவும் அப்பெயர்க்கண் இரண்டாம் வேற்றுமையும் மூன்ரும் வேற்றுமையும் தடுமாறு தொழில்பற்றி மயங்கியவாறு காண்க.