பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.37 354. உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும் ஒருதம் மெச்சம் ஈறுற முடியும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். வேற்றுமையுருபுகள் விரிந்துந் தொக்குந் தம்முள் விரவிப் பல அடுக்கிவரினும் வெவ்வேறு பல அடுக்கி வரினும், மூவகை வினைச் சொற்களும் வெவ்வேறு பல அடுக்கிவரினும், தத்தம் எச்சமாகிய முடிக்குஞ் சொல் ஒன்றுவர அதனோடு அனைத்தும் முடிவனவாம்?’ என்பது இதன் பொருள் . ளங். இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார் . இஃது வேற்றுமையுருபு நிற்கும் இடவேறுபாடு கூறுகின்றது. (இ.எ) ஈறு பெயர்க்காகும் இயற்கைய’ எனச் சொல்லப் பட்ட ஆறு வேற்றுமையுருபும் வேற்றுமைத் தொடரின் இறுதிக் கண்ணும் அத்தொடரின் இடையிலும் வழக்கு நெறிப்பட்ட பொருளின்கண் நிற்றலே நீக்காது கொள்வர் ஆசிரியர். எ.று. (உ-ம்) கடந்தான் நிலத்தை வந்தான் சாத்தைெடு; கொடுத்தான் சாத்தற்கு வலியன் சாத்தனின் ஆடை சாத் தனது; இருந்தான் குன்றத்துக்கண் எனத் தொடரின் இறுதி யில் ஆறுருபும் வந்தன. நிலத்தைக் கடந்தான்; சாத்தைெடு வந்தான்; சாத்தற்குக் கொடுக்கும்; சாத்தனின் வலியன்; சாத்தனது ஆடை, குன்றத்துக்கண் இருந்தான் எனத்தொடரின் இடையில் ஆறுருபும் வந்தன. இனி, நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் எனவே அப்பொருளுணர்த்தாக்கால் அவ்வுருபுகள் அவ்விடத்து நிற்றல் வரையப்படும் எனக்கூறி, ஆருமுருபும் ஏழாமுருபும் சாத்தனது ஆடை, குன்றத்துக்கட் கூகை என இடையில் நின்று தம் பொருளுணர்த்திகுற் போல, ஆடை சாத்தனது, கூகை