பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அவையும் வேண்டுமேற் கொள்க’ எனவுரைத்து, குடத்தைப் பிறர்க்கு வனேந்தான் என இன்னதற்கென்பதும் அற முதலிய பயன் கருதி வனைந்தான் என இது பயன் என்பதும் ஏதுவின் பாற்பட்டுக் கருவியுள் அடங்கவும் பெறுமாதலின் அவை இழிந் தனவாயின எனவும் சிவஞான முனிவர்தரும் விளக்கம் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும். ளயச. முதலிற் கூறுஞ் சினேயறி கிளவியும் சினே யிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனேய மரபினவே ஆகுபெயர் க் கிளவி. இஃது ஆகுபெயராமாறு உணர்த்துகின்றது. (இ-ஸ்) முதற்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் சினேப் பொருளை அறிவிக்குஞ் சொல்லும், சினேச்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் முதற் பொருளே அறிவிக்குஞ் சொல்லும், நிலத்துப் பிறந்த பொருள்மேல் அந்நிலத்துப் பெயர் கூறலும், பண்புப் பெயர் அப்பண்புடையதனை உணர்த்தி நிற்கும் சொல் லும், முதற்காரணப் பெயரான் அக் காரணத்தான் இயன்ற காரியத்தினைச் சொல்லுதலும், அன்மொழிப் பொருள் மேல் நில்லாத இருபெயரொட்டும், செய்யப்பட்ட பொருள்மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல்லோடே கூடி அத் தன்மையினவாகிய இலக்கணத்தைப் பெறும் ஆகுபெயரான சொல். எ-று. ஒரு பொருளின் இயற்பெயர் மற்ருெரு பொருளுக்கு ஆகி வருவது ஆகு பெயராகும். (உ-ம்) தெங்கு தின்ருன், கடுத்தின்ருன் என்புழி தெங்கு, கடு என்னும் முதலுக்குரிய இயற்பெயர்கள் அவற்றின் காயாகிய பொருளுக்கு ஆயினமையால் முதலாகு பெயர். இலே நட்டு வாழும், பூ நட்டு வாழும் என்புழி இலே, பூ என்னும் சினேப் பெயர்கள் அவற்றின் முதற்பொருளாகிய கொடிக்கு ஆயினமை