பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 எண்ணுப் பெயரால் அவ்வெண்ணப்படும் பொருளைக் கூறுதற்கு முன்னும் அப்பொருள் ஒன்ருயே நிற்றலின் எண்ணுப் பெயரை ஆகுபெயரோடு கூருராயினர் என்பது நச்சினர்க்கினியர் தரும் விளக்கமாகும். ளயன. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இஃது ஆகு பெயர்க்குப் புறனடை, (இ.ஸ்) மேற்சொல்லப் பட்டனவன்றிப் பிறவும் ஆகு பெயருளவேல், அவையெல்லாம் சொல்லப்பட்ட வற்றது இயல் பான் உணர்ந்து கொள்க. எ-று. (உ-ம்.) யாழ், குழல் என்னும் கருவிப் பெயர், யாழ் கேட்டான், குழல் கேட்டான் என அவற்றினகிய ஓசையை யுணர்த்தி ஆகுபெயராயின. யானை, பாவை என்னும் உவமைப் பெயர், யானை வந்தான், பாவை வந்தாள் என உவ மிக்கப்படும் பொருள்மேல் ஆயின. பொங்கல், வற்றல் என்னுந் தொழிற்பெயர், அத்தொழிலாளுய பொருள்மேல் ஆயின. நெல்லோ பொன்னே பெற்ருன் ஒருவன் சோறு பெற்றேன் என்ற வழிக் காரணப் பொருட்பெயர் காரியத்தின் மேலாயின. ஆறறியந்தணர் என்புழி ஆறு என்னும் வரையறையாகிய எண்ணின் பெயர், அவற்ருற் சுட்டப்படும் அங்கங்களாகிய நூல்களுக்காயிற்று. இவ்வாறு ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகு இடத்து அவ்வாறு அதற்குரிய இயைபு ஓரிலக்கணத்தன்) வேறுபட்ட இலக்கணத்தை யுடையதாதலின் அவ்விலக்கண மெல்லாம் கடைப்பிடித்துணர்க என ஆகுபெயர்க்குப் புறனடை கூறியவாறு. இவ்வாறு ளயச முதல் ளயன் முடியவுள்ள நூற் பாக்களா லும் உரைகளாலும் பல வேறியல்பினதாக விரித்துணர்த்தப் பெற்ற ஆகுபெயரிலக்கணத்தி&ன, 289. பொருண்முத லாருே டளவை சொல் தானி கருவி காரியங் கருத்தன் ஆதியுள்