பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 என்னும் நூற்பாவாகும். இது கடவுள் வணக்கமும் அதிகார மும் உணர்த்துவது. இதன் பொருள் :- மூன்றுலகத்திலுமுள்ள உயிர்கட்கெல் லாம் நிழலைச் செய்யும் நிறைந்த மதியைப் போலும் மூன்று குடையையுடைய அழிவில்லாதவனுடைய அடிகளே வணங்கிச் சொல்லிலக்கணத்தை யான் கூறுவேன், என்றவாறு . எல்லாச் சமயத்தோரானும் வணங்கப்படும் படைத்தல், காத்தல், அழித் தல் ஆகிய தொழில்களுக்குரிய எல்லாக் கடவுளாகியும் நின்ருன் ஒருவனே என்னும் பொது நோக்குடன் அருகதேவனே வணங் கும் பவணந்தி முனிவர் அம்முதல்வனே எழுத்ததிகாரத்தில் பூமலி யசோகின் புனே நிழ லமர்ந்த நான்முகற் ருெழுது நன் கியம்புவ னெழுத்தே. எனப் படைத்தற்ருெழில்பற்றி நான்முகன் எனப் போற்றியது போன்று காத்தற்ருெழில் பற்றி இவ்வதிக்ாரத்தில் அச்சுதன் என்ற பெயராற் போற்றியுள்ளமை ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும்.