பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ள உஉ. ஒவும் உவ்வும். ஏயொடு சிவனும். (இ.ள்) ஒகாரமும் உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும். 6τ-ΦΙ . (உ-ம்) கே , கோவே, வேந்து, வேந்தே எனவரும். ளஉங். உகரந் தானே குற்றிய லுகரம். இஃது ஐயம் அறுக்கின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம். எ- று. திரு, திருவே எனச் சிறுபான்மை முற்றியலுகரமும் விளியேற்கும். ள உச. ஏனை யுயிரே யுயர் திணை மருங்கிற் ரும்விளி கொள்ளா வென்மனர் புலவர். இஃது ஐய மகற்றுகின்றது. (இ-ள்) மேற் கூறப்பட்ட நான்கீறுமல்லா ஏனை உயிரீறு உயர்திணைக்கண் விளிகொள்ளாவென்று சொல்லுவர் புல வர் எ-று. ஏனையுயிர் விளிகொள்ளா எனவே மேற்கூறப்பட்ட உயிர் முற்கூறிய வாறன்றிப் பிறவாற்ருனும் விளி கொள்வன உள வென்பதாம். (உ-ம்.) முனி, முனியே, கணி, கணியே எனவரும். ‘ஏனையுயிர் தாம் விளி கொள்ளா ? எனவே அவை தம்மியல் பால் விளி கொள்ளாவாயினும் சொல்லுவான் குறிப்புவகை யால் விளி கொள்ளுதலும் உண்டு என்பதும் கூறியவாறு. (உ-ம்) உயர்திணையில் அகரவீறு விளி கொள்ளாதாயி னும் மக, மகவே எனஏகாரம் பெற்று விளியேற்றவாறு காண்க .