பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 (இ-ள்) அவ்விரண்டிற்றுப் பண்புகொள் பெயரும் அவ் விற்றுத் தொழிற் பெயர் போல ஈரொடு சிவணியும் சிறு பான்மை ஈரொடு ஏகாரம்பெற்றும் விளியேற்கும். எ-று. (உ-ம்.) கரியார், கரியீர், இளையார், இளையீர் எனவும், கரியிரே இளையீரே எனவும், கரியவரே, இளையவரே எனவும் வரும். இனித் தன்னின முடித்தல் என்பதல்ை, சீவகசாமி என்னும் இருபெயரொட்டுப் பண்புத் தொகை, சீவகசாமியார் என ஆரிருய்ச் சீவக சாமியீரே என ஈரொடு ஏகாரம் பெறுதல் கொள்க. ளசக. அளபெடைப் பெயரே அளபெடை யியல. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) ரகாரவீற்று அளபெடைப்பெயர் னகார ஈற்று அளபெடைப் பெயர்போல மாத்திரைமிக்கு இயல்பாய் விளி யேற்கும். எ-று. (உ-ம்.) சிருஅஅர், மகாஅஅர் எனவரும். ரகாரவீற்று உயர்தினைப் பெயர்கள் விளியேற்குங்கால் அடையும் இத்த கைய உருபு வேறுபாடுகளே, 308. ரவ்வீற் றுயர் பெயர்க் களபெழ வீற்றயல் அகரம் இஈ யாத லாண்டையா ஈயாத லதனே டேயுற லீற்றே மிக்கயல் யாக்கெட் டதனயல் நீடல் ஈற்றின் ஈருறல் இவையுமீண் டுருபே. என வரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறி யுள்ளார். ரகசரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபெழலும், ஈற்றயலில் அகரம் இகரமாதலும் ஈகாரமாதலும், ஆகாரம்