பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இவ்விரு சூத்திரப் பொருளேயும் விளக்கிச் சொல்லின் இலக்கணமுணர்த்துவனவாக அமைந்தன. பின்வரும் நன்னூற் சூத்திரங்களாகும். 258. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழியென்ரு இருதினை யைம்பாற் பொருளையுந் தன்னேயும் மூவகையிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படைக் குறிப்பின் விரிப்பது சொல்லே. ஒருமொழியும் தொடர்மொழியும் பொதுமொழியும் என மூன்று வகையினதாய் இருதினையாகிய ஐம்பாற் பொருளேயும் அப்பொருளேயன்றித் தன்னேயும் மூன்றிடத்திலும் உலக வழக் கினும் செய்யுட்கண்ணும் வெளிப்படையாலும் குறிப்பிலுைம் விளக்குவது சொல்?’ என்பது இதன் பொருளாகும். எனவே எல்லாச் சொல்லும் ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி என்னும் மூன்ருயும் எல்லாப் பெர்ருளும் இரு திணை ஐம்பாலாயும் அடங்குமென்பது உம், சொல்லும் பொரு ளுமாகிய அவை உயர்திணை, அஃறிணை, ஆண், பெண், பலர், ஒன்று, பல, தன்மை, முன்னிலே, புடர்க்கை, வழக்கு செய்யுள், வெளிப்படை, குறிப்பு என்னும் காரணங்களால் உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல், உயர்திணைப்பொருள், அஃறிணைப்பொருள் என இவ்வாறு இயைத்து வழங்கப்படு மென்பது உம், உயிர்க்கு அறிவு கருவியாய் நின்று தன்னையும் பொருளேயும் உணர்த்துமாறுபோல, ஒருவர்க்குச் சொற்கருவி யாய் நின்று தன்னையும் இருதிணேயைம்பாற் பொருளையும் உணர்த்து மென்பது உம் பெற்ரும். 259. ஒருமொழி யொருபொரு ளன வாந் தொடர் மொழி பலபொரு ளன பொது இருமையு மேற்பன. 'ஒருமொழிகளாவன பகாப்பதமேனும் பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒரு பொருளேத்தருவனவாம். தொடர் களாவன அவ்விருவகைப் பதங்களும் தன்குேடும் பிறிதோடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தால் இரண்டு முதலி யவாகத் தொடர்ந்து நின்று இரண்டு முதலிய பல பொருளைத்