பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 (இ.ஸ்) நிகழ்காலம் பற்றிவரும் பலர் வரைகிளவியால் உயர்திணை யொருமைப்பால் தோன்றுதலும் உரித்து; அவ் வொருமைப்பால் தோன்று.தற்கேற்ற வினேயின்கண். எ.று. நிகழுஉ நின்ற-நிகழா நின்ற. 'நிழகமூஉ நின்ற பலர்வரைகிளவி என்றது, படர்க்கை யிடத்துப் பலர்பாலே நீக்கி ஏனே நான்கு பாற்கும் பொதுவாய் நிகழ்காலம் உணத்திவரும் செய்யும் என்னும் முற்றின. 'பல் லோர் படர்க்கை, முன்னிலே தன்மை, யவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச், செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா ? (தொல் - வினையியல் -30) எனவரும் வினையியற் சூத்தி ரத்து நிகழுங்காலத்துச் செய்யுமென்கிளவி என்றதும் அது. (உ-ம்.) சாத்தன் யாழெழுஉம், சாத்தி சாந்தரைக்கும், என்றவழி சாத்தன் சாத்தி என்னும் பொதுப்பெயரும், யாழ் எழுஉதலும் சாந்தரைத்தலும் ஆகிய வினையும், சொல்லமைப் பால் இருதினேக்கும் பொதுவாயினும், முறையே யாழ் வாசித் தல் சந்தனத்தை அரைத்தல் என்னும் சிறப்பு வினையாகிய பொருளமைப்பால் உயர்திணை ஆனும் பெண்ணுமாகிய ஒரு மைப்பால் விளங்கியவாறு காண்க. தோன்றலும் உரித்தே? என்னும் எதிர்மறையும்மையால், பலர்வரை கிளவியால் உயர் திணையொருமை தோன்ருமையும் உரித்து என்பது கொள்ளப் படும். இருதிணைக்கும் பொதுவாகிய நடத்தல், கிடத்தல் முத லாகிய பொதுவினை பற்றிவரும் பலர் வரை கிளவியாகிய செய் யுமென் முற்றல் உயர்திணை யொருமை தோன்ருமையின் அன்ன மரபின் வினவயினை என அது தோன்றுமிடம் இதுவென வரைந்தோதினர். இனி, உயர்திணையொருமை தோன்றலும் உரித்தே என்ற உம்மையால், அஃறிணையொருமை தோன்றலும் உரித்து எனப் பொருள்கூறி, சாத்தன் புல்மேயும், சாத்தி புல்மேயும் என்ற வழி அஃறிண்ை என்பது பெறப்பட்டது என்பர் தெய்வச் சிலேயார், ளனச. இயற்பெயர் சினேப்பெயர் சினே முதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே