பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 ஒருவன், ஒருத்தி, ஒன்று, பல என்னும் நான்கு பால்களேயும் சுட்டி நிற்கும் இவற்றை நோக்கச் சின்மை சுட்டிய பெயரெனப் படுவதல்லது பன்மை கட்டிய பெயராகா என்றும், அன்றியும் உயர்திணை ஆன்ெருைமை. பெண்ணுெருமை அஃறிணையொருமை என்ற மூன்றும் ஒருமைப்பால் என ஒன்ருயடங்குதலின் அவை பலபால்களையும் சுட்டி நின்றன அல்ல ஆகலான் அம்மூன் ருெருமையுஞ் சுட்டிய பெயர்கள் ஒருமை சுட்டிய பெயரென அடங்குமென்றும், இஃது ஒருமையும் பன்மையுமென்னும் இரு பால்களையும் சுட்டி நிற்றலாற் பன்மை சுட்டிய பெயராயிற் றென்றும் எவ்வகையால் நோக்கினும் பன்மை சுட்டிய என் னும் இவ்வடைமொழி இனமுள்ள அடைமொழியே என்றும் இதன் பெயர்க் காரணத்தை விளக்குவர் சிவஞானமுனிவர். ள அங். ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர் க்கும் ஒன்றிய நிலேயே. இஃது ஒருமை சுட்டிய பெயர் இரு திணைக்கண்ணும் தனக்குரிய பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒருமை சுட்டி வரும் இயற்பெயர், சினேப்பெயர், சினே முதற் பெயராகிய மூன்றும், அஃறிணையொருமைக்கும் உயர்திணை ஆணுெருமை பெண்ணுெருமைக்கும் ஒப்பவுரியன . 6Τ-Δζι . (உ-ம்) கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும், செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் எனவும், கொடும்புற மருதி வந்தது, கொடும்புற மருதி வந்தான், கொடும்புறமருதி வந்தாள் எனவும் முறையே ஒருமையியற்பெயர், ஒருமைச்சினைப்பெயர், ஒருமைச் சினைமுதற்பெயர் இருதிணை முக்கூற்ருெருமைக்கும் உரியவாய் வந்தவாறு காண்க. ஆண்மை சுட்டிய பெயர், பெண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என இனஞ் சுட்டும் அடைமொழிகளேயுடைய விரவுப்பெயர்கள், இருதிணை