பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 (உ-ம்) நீ வந்தாய் எனவரும். ளகம்ை. ஏனேக் கிளவி பன்மைக் குரித்தே. இது, நீயிர் என்பது பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) நீயிர் என்னும் பெயர் பன்மைக்குரித்து. எ-று. பன்மையாவது பல்லோர்க்கும் பலவற்றுக்கும் பொதுவாகிய பன்மையென்னும் எண். (உ-ம்) நீயிர் வந்தீர் எனவரும். நீயிர் நீ என்பன இருதிணையைம்பாலுள் ஒன்றன வரைந் துணர்த்தாவாயினும் ஒருமை பன்மை யென்னும் பொருள் வேறுபாடுடைய என வரையறுத்தவாறு. இருதினப் பொதுப் பெயராகிய மூவிடப் பெயர்களையும் தொகுத்து இருதிணைக்கண்ணும் அவற்றுக்குரிய பால்களே வகுத்துணர்த்தும் முறையிலமைந்தன, 284. தன்மை யான்ை யாநா முன்னிலே எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ அல்லன படர் க்கை யெல்லாமென ல் பொது. 286. தான்யா னிை யொருமை பன்மைதாம் யாம் நா மெலா மெலீர் நீயிர்நீர் நீவிர். எனவரும் நன்னூற் சூத்திரங்களாகும். தேன்மைக்குரிய பெயர்கள் யான், நான், யாம், நாம் என்னும் நான்குமாம். முன்னிலைப் பெயர்கள் எல்லீர், நீயிர், நீவிர், நீர், நீ என்னும் ஐந்துமாம். இவ்வொன்பதுமல்லாத பெயர்கள் அனைத்தும் படர்க்கையிடத்திற் குரியனவாம். அவற் றுள் எல்லாம் என்னும் பெயரொன்றும் மூவிடத்திற்கும் உரிய தாகும். தான், யான், நான், நீ, என்பன ஒருமைப் பாலுணர்த்துவன. ஒழிந்தன பன்மைப்பாலுணர்த்துவன: என்பது இச்சூத்திரங்களின் பொருளாகும்.