பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

  • ஒருவர் என்னும் பெயர் உயர்திணை ஆண்பால் பெண்பால் இரண்டிற்கும் பொதுவாய் அத்திணைப் பன்மை வினைகொண்டு முடியும் இயல்பினையுடையது என்று சொல்லுவர் ஆசிரியர்?? என்பது இதன் பொருளாகும்.

(உ-ம்.) ஆடவருள் ஒருவர் அறத்தின் வழி நிற்பார், பெண்டிருள் ஒருவர் கொழுநன் வழி நிற்பார் எனவரும். ஒருவர் என்னும் இப்பெயர் ஒருமையாகிய பகுதிக்கேற்ப இருபாற்கும் உரியதாம் எனவும், அர் என்னும் விகுதிக்கேற்பப் பன்மை வினைகொளும் எனவும், இச்சொல் ஒருமைப் பகுதி யோடு பன்மை விகுதி மயங்கிப் பால் வழுவாய் நின்றதேனும் தன்னியல்பாய் நின்றமையின் வழாநிலே போலும் எனவும், பன்மைவினை என்றது சொல்மாத்திரையிற் பன்மைவினை யன்றிப் பொருள் மாத்திரையின் ஒருமை வினையா மாதலின் இப்பயனிலையை ஒருவரென்னுஞ் சொற் கொள்ளுதல் வழு வன்றெனவும் உணர்த்தியவாறு. ள கூங். இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். இது, நீயிர், நீ, ஒருவர் என்பவற்றிற்கு ஓர் இலக்கணங் கூறு கின்றது. (இ-ள்) நீயிர், நீ, ஒருவர் என்பவற்றை இன்னபாலுக் குரிய பெயரென்று அறியலுறின் சொல்லுவான். குறிப்பொடுங் கூட்டி முறையால் உணர்க. எ-று. சாத்தைெருவன் தான் இருக்குமிடத்திற்கு ஒருவனே. ஒருத்தியோ பலரோ ஒன்ருே பலவோ சென்றவழி, நீ வந்தாய்; நீயிர் வந்தீர்? எனக் கூறுதலுண்டு. அங்ங்ணம் கூறியது கேட்டோர் இவன் இன்னபால் கருதிக் கூறினன் என்பதனைக் குறிப்பிலுைணர்வர். இனி ஒருவர் ஒருவரைச் சார்ந் தொழுகலாற்றின் எனக்கூறியவழி ஒருவர் என்பது ஒருவன் என்னும் ஆண்பாலக் குறித்ததோ அன்றி ஒருத்தி என்னும் பெண்பாலேக் குறித்ததோ என்பது இடமுங் காலமும் பற்றிக் குறிப்பில்ை உணரப்படும்.