பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வினேயியல் வினையென்பது பலபொரு ளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினை நிகழ்ச்சியையும் உணர்த்தும். தொழிற்பண்பை உணர்த்தும் சொல்ல உரிச் சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த் துஞ் சொல்ல வினைச் சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச் சொல்லாவது வேற்றுமையுருபு ஏலாது வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காலமுணர்த்தி நிற்பதாகும். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம் மூன்ரும். இறந்தகாலம் என்பது தொழில் முற்றுப்பெற்ற நிக்ல. நிகழ்காலம் என்பது தொழில் தொடங்கி முடிவுபெருது தொடர்ந்து நிகழும் நிலை , எதிர்காலம் என்பது தொழிலே தொடங்கப் பெருத நிலை. இம்மூவகைக் காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட் டுஞ் சொற்களை வினை என்றும், இக்காலங்களைக் குறிப்பாக உணர்த்துஞ் சொற்களைக் குறிப்பு என்றும் கூறுவர் தொல் காப்பியர். இவற்றை முறையே தெரிநிலேவினையென்றும் குறிப்புவினையென்றும் வழங்குவர் பிற்கால ஆசிரியர்கள். இவ் வினைச்சொற்கள் முற்று, வினேயெச்சம், பெயரெச்சம் என மூவகைப்படும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிக ளோடு கூடிப்பொருள் முற்றி (நிறைந்து) நிற்குஞ் சொற்கள் வினைமுற்றுக்களாகும். ஐம்பாலாகிய வினைமுதலே யுணர்த்தும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்ருெரு வினைச் சொல்லோடல்லது முற்றுப்பெருது நிற்பன வினையெச்சங்க ளாகும். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைந்த குறைச் சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச் சொற்கள் பெயரெச்சம் எனப்படும். இம்மூவகை வினைச்சொற்களின் இலக் கணமுணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த் தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேவைரையரும் நச்சிர்ைக்கினியரும் 54-ஆகத்