பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 ஆள், அர், ஆர் என்னும் படர்க்கையிறு ஆறும் எனப் பன்னிரண்டாம் . (உ-ம்) கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியென், கரியேன் எ-ம், கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார் எ-ம், அவ்வவ்வீறு அவ்வவ் இடமும் பாலும் விளக்கிய வாறறிக ஒழிந்த பொருட்கண்ணும் ஒட்டுக. 'ஆன், ஆள், ஆர், என்பன நிலப் பொருண்மைக்கண் அல்லது பிறபொருட்கண் பயின்று வாரா. வந்தனன் எனத் தெரிநிலேவின, தொழின்மை மேற்படத் தொழிலுடைப் பொருள் கீழ்ப்பட முற்ருய் நின்றுணர்த்தியவாறு போல, உடையன் எனக் குறிப்புவினையும் உடைமை மேற்பட உடையான் கீழ்ப்பட முற்ருய் நின்றுணர்த்துதலுங் கொள்க. வந்தான், உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமாறறிக. இஃது, அஃறிணை மருங்கின் - மேலேக் கிளவியொடு வேறு பாடிலவே' என்பதற்கும் ஒக்கும். உளவிகள். அஆ வஎன வரூஉ மிறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை இது, முறையானே அஃறிணைத் தெரிநிலைவினையுள் பன்மைவினை கூறுகின்றது. (இ-ள்) அகரமும் ஆகாரமும் வகர வுயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றுசொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம். எ-று. அகரம் மூன்று காலமும் பற்றிவரும். ஆகாரம், எதிர் மறை வினையாய் மூன்று காலத்திற்கும் உரித்தாயினும், எதிர் காலத்துப் பயின்றுவரும். அகரம், இறந்தகாலம் பற்றி வருங் கால் கடதற என்னும் (காலவெழுத்து) நான்கன்முன் அன் (சாரியை) பெற்றும், பெருதும் வரும். ஏனை எழுத்தின்முன் ரகார ழகார மொழித்து இன் பெற்றும், யகரத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி அன்பெற்றும் பெருதும் வரும்.