பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முன்னிலை வினைக்குறிப்பு, உயர்திணை வினைக்குறிப்பிற்கு ஒதிய பொருள் பற்றி ஐ: ஆய், இர், ஈர் என்னும் நான்கீற்ற வாய் வரும். (உ-ம்) கழலினை, கழலிய்ை, கழலினிர், கழலினிர் என வரும். ஏனையவற்றேடும் இவ்வாறேயொட்டிக் கொள்க. இகர வீறு குறிப்புவினேக்கு வாராது. முன்னிலைப் பன்மைவினையும் வினேக்குறிப்புமாகிய இவற்றை, 386. இர் ஈ fற்ற விரண்டு மிருதிணேப் பன்மை முன்னிலே மின்னவற் றேவல். எனவரும் சூத்திரத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். இர், ஈர் என்னும் இருவிகுதியினையும் இறுதியாக வுடைய மொழிகள் இருதிணைப்பன்மை முன்னிலே வினை முற்றும் குறிப்புமுற்றுமாகும். மின் என்னும் விகுதியை இறுதியாகவுடைய மொழிகள் இருதிணைப்பன்மை முன்னிலே யேவல் முற்ரும் என்பது இதன் பொருள். 'மின் அவற்று ஏவல் என்றமையான் உண்ணும், தின்னும் நீர் என உம் ஈற்றவாய் வரும் பன்மையே வல் புதியன என்பது உம், அவை ‘புதியன புகுதலும் வழுவல? என்பதன்ை அமையுமென்பது உம் பெற்ரும்: என்பர் சிவ ஞானமுனிவர். உஉடு. எஞ்சிய கிளவி யிடத்தொடு കിഖങ്ങി ஐம்பாற்கு முரிய தோன்ற லாறே. இது, முற்குறித்த விரவுவினைகளுள், முன்னிலை யொழித்து ஒழிந்தவற்றின் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) முன்னிலே வினையொழித்து ஒழிந்த ஏழு வினைச் சொல்லும் மூன்றிடத்தொடும் பொருந்தி ஐந்து பாலுக்கும் உரியனவாம்; தத்தம் பொருட்கண் தோன்றுமிடத்து. எ-று.