பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 உஉசு. அவற்றுள், முன்னிலை தன்மை யாயி ரிடத்தொடும் மன்னு தாகும் வியங்கோட் கிளவி. இஃது எய்தியது. விலக்கிற்று. (இ-ள்) மேல் எஞ்சிய கிளவி எனப்பட்ட ஏழனுள், வியங் கோள்வினை, முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தோடு நிலைபெருதாகும். எ-று. மன்னுதல் என்றது, பெரும்பான்மையும் நிகழுதல்’ எனக் கொண்டு, முன்னிலே தன்மை என்னும் இரண்டிடத்தும் செல் வனவாகிய வியங்கோள் வினேச்சொல் சிறுவரவின. என்பர் இளம்பூரணர். (உ.ம்) நீர் செல்க, நீ செல்க, யான் செல்க எனவரும். இவ்வாறு தன்மை முன்னிலையிடங்களில் சிறு வரவின எனக் குறித்த வியங்கோள் வினை, தம் காலத்துப் பெருவரவினவாய் வழங்குதல் கண்ட பவணந்தி முனிவர், 387. கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப. எனச் சூத்திரஞ் செய்தார். கயவென்னும் இரண்டு உயிர்மெய்யினையும் ரகர வொற்றினையும் இறுதியாகவுடையன வியங்கோள் வினைமுற்ரும். அவை மூவிடத்தினும் ஐம்பாலினும் ஆக எங்கும் செல்லு மென்று கூறுவர் புலவர்?’ என்பது இதன் பொருளாகும். ஆறு. ஏவல், வியங்கோள்-ஏவற் பொருண்மையைக் கொண்ட வின . ஆ. வாழ்க’ என வாழ்த்துதற் பொருளிலும் யோனும் நின்ைேடு உடனுறைக’ என வேண்டிக் கோடற் பொருளிலும் வரும் தொல்காப்பியர் வியங்கோளிறு இவையென விளங்க எடுத்துரையாராயினும், ஏவல் கண்ணிய வியங் கோட் கிளவியும்’ (தொல் - எழுத்து) என அகரவிறும்