பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 344. சினேவினே சினேயொடு முதலொடுஞ் செறியும். எனவரும் நன்னூற் சூத்திரங்களாகும். 'முதற்கண் கூறப்பட்ட செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்னும் நான்கு வாய்பாடுகளும், இறுதியிற் கூறப்பெற்ற வான், பான், பாக்கு, என்னும் மூன்றும் வினைமுதல் வினைகொண்டு முடியும்; இடைநின்ற ஐந்தும் 'இன்' என்ற தல்ை வருவன பிறவும் வினைமுதல் வினையையும் பிறிதின் வினையையும் கொண்டு முடியும்?? என்பதும், முதலின் நான்கும் என்ற வினையெச் சங்கள் சினேவினையாயின் அவை தம் முதல்வினையாகிய சினை வினையைக் கொண்டு முடிதலேயன்றி வினைமுதல் வினையைக் கொண்டு முடிதலும் உண்டு?? என்பதும் இவற்றின் பொருளாகும். உங்ங். பன்முறை யானும் வினேயெஞ்சு கிளவி சொன் முறை முடியா தடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. இது, வினையெச்சங்கள் அடுக்கியவழிப் படுவதொர் முறைமை கூறுகின்றது. (இ-ள்) வினையெச்சச் சொல்தாம், சொற்கள் தோறும் முற்றுப்பெருது பலவாற்ருனும் அடுக்கிவரினும், இறுதிக்கண் நின்றது முடிய அதல்ை ஏனையவும் பொருள்முடிவு பெற்றன வாம். எ-று. வினேயெஞ்சு கிளவி சொல் முறை முடியாது பன்முறை யானும் அடுக்குந வரினும் முன்னது முடியப் பொருள் முடியும் என இயைத்துரைக்க. பன்முறையானும்-பலவாற்ருனும். பலவாற்ருனும் அடுக்கி வருதலாவது ஒரு வாய்பாட்டானும் பல வாய்பாட்டானும் அடுக்கி வருதல். சொன்முறை முடியாமை யாவது தம்மொடு தாமும் பிறசொல்லும் பொருளால் முடியாமை. (உ-ம்) உண்டு தின்று ஒடிப்பாடி வந்தான் என்புழிச் செய்தென்னும் ஒரு வாய்பாட்டு எச்சம் பல அடுக்கிவந்து முன் னுள்ள பாடி என்பது வந்தான். என்னும் வினைகொண்டு முடிய அம்முடியே பின்நின்ற எச்சங்களுக்கும் முடிபாயிற்று.