பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 நடத்தல், நடவாமை என்பன தொழிற் பெயராதலின் ஈறுதிரிந்தன. ஒடாக் குதிரை ஆளுவறிவு என்றற்ருெடக்கத்தன ஓடாத ஆதை என்பவற்றைக் குறைத்து வழங்கினவன்றி ஈறு வேறுபட்டன அல்ல. ஓர் வினை நிகழுங்கால் அவ்வினைக்குக் கருத்தாவும் செயப்படுபொருளும் முதலியவாகப் பெயர்ப் பொருளே வேற்றுமை செய்து நின்ற உருபுகள், அவ்வின நிகழாக் காலத்தும் அவ்வாறு பெயர்ப்பொருளே வேற்றுமை செய்து நிற்றலானும், வினவிகுதிகளும் அவ்வினை நிகழுங்கால் முற்றின்கண் கருத்தாவையும் எச்சங்களிற் பெயரொழியையும் வினையொழியையும் தந்து நின்ருற்போல, வினை நிகழாக் காலத் தும் அவ்வாறு தந்து நிற்றலானும், உருபும் வினையும் எதிர்மறுத் துரைப்பினும் தத்தம் உருபின் திரியா, தத்தம் ஈற்றின் திரியா என இங்ங்ணம் கூறப்பட்டன. உங்.எ. தத்தம் எச்சமொடு சிவனுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். இது பெயரெச்ச வினையெச்சங்களின் இடை நிகழும் முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ.ள்) தத்தம் எச்சமாகிய பெயரோடும் வினையோடும் இயையுங் குறிப்புடைய எந்தச் சொல்லாயினும் இவ்வெச்சத் திற்கும் அவற்ருன் முடிவனவாகிய தமக்கும் இடையே நிற்றலே. நீக்கார் ஆசிரியர், எறு. (உ-ம்) கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யாஜன எனவும், உழுது சாத்தன் வந்தான்; உழுது ஏரொடு வந்தான் எனவும் வரும். சிவனுதல் - இயைதல், வரைதல் - நீக்குதல். சிவ னுங் குறிப்பின் நீக்கார் எனவே, சிவனக் குதியின் நீக்கு வர் என்பதாம். சிவனுக் குறிப்பினவாவன, உறுதியில் பின் வரும் எச்சத்தோடு இயைந்து நில்லாது நிலேமொழியாக நின்ற சொல்லொடும் தாமே இயைந்து கவர்பொருள் தருவன. உண்டு விருந்தொடு வந்தான் என்ற வழி, விருந் தொடு உண்டு என வினையெச்சத்தோடும் இயைதலிற்