பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 யுணர்த்த வேண்டிய வினேச்சொல் வினே நிகழாமையை யுணர்த்துதல் வழுவாயினும் அமைக என மரபுவழுவமைத்த வாறு : உசடு. வாராக் காலத்து வினேச்சொற் கிளவி இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலே. இஃது எதிர்கால வினேச்சொல் இறந்தகாலத்தோடும் நிகழ் காலத்தோடும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) எதிர்காலத்திற்குரிய வினைச்சொற் பொருண்மை இயற்கையாதலேயும் தெளியப்படுத்தலேயும் சொல்லுமிடத்து இறந்தகாலச் சொல்லாலும் நிகழ்காலச் சொல்லாலும் விளங்கத் தோன்றும். எ-று. வாராக்காலம் - எதிர்காலம். இயற்கை என்பது இயல் பாகிய தன்மை முதலாயினவற்ருல் உணரப்படுவது. தெளிவு என்பது சான்ருேர் தெளிந்துகூறிய நூற்பொருட்டெளிவால் வருவது. ஒரு காட்டின்கண் போவோர் அங்குக் கள் வரால் உடை முதலியன கவர்ந்து கொள்ளப்படுதல் அந்நிலத்தின் இயல்பு என்பதனைத் துணிந்தார், உடை முதலியன கவர்ந்து கொள்ளப் படா முன்னரே இக்காட்டுட் போகிற் கூறை கோட்பட்டான், கூறை கோட்படும்’ என்று கூறுதல் உலகியல் வழக்கு. எறும்பு தன் முட்டையினைக் கொண்டு மேட்டு நிலத்திற்கு ஏறிச் செல்லின் மழை பெய்யும் என்பதனே நூலால் தெளிந் துணர்ந்தார், எறும்பு முட்டைகொண்டு திட்டையேறியவழி, மழைபெய்யா முன்னும் 'மழை பெய்தது, பெய்யும்?? என்பர். இங்கு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்தகாலத் தாலும் நிகழ்காலத்தாலும் தோன்றியவாறு காண்க. வாராக் காலத்தும் நிகழுங்காலத்தும்?? (உசக) எனவும் மிேக்கதன் மருங்கின்: (உசஉ) எனவும், வாராக் காலத்து வினைச்சொற்கிளவி (உசடு) எனவும் வரும் இம்மூன்று சூத்தி