பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டுவ்விகுதியாகவும் திரிந்ததெனக் கொள்ளாது துறுடு என மூவேறு விகுதிகளாக் கொண்டார் ஆசிரியர். இச் சூத்திரத்தை அடியொற்றியது, 328. துறுடுக் குற்றிய லுகர வீற்ற ஒன்றன் படர்க்கை டுக் குறிப்பிகுைம். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். கூ. அஆவ என வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பல வறி சொல்லே. இஃது அஃறிணைக்கட் பலவறிசொல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ ள்) பலவறி சொல்லாவன அஆவ என்னும் இறுதியை யுடைய அக்கூற்று மூன்று சொல்லாம்.எ-று. பலவறிசொல்-அஃறிணைப் பலவின்பாற் சொல். (உ-ம்) உண்டன, உண்ணுநின்றன, உண்பன, கரியன எனவும், உண்ணு, தின்ன எனவும், உண்குவ, தின்குவ எனவும் வரும். உண்டன, உண்ட என இறந்தகாலத்தும், உண்ணு நின்றன, உண்ணு நின்ற என நிகழ்காலத்தும் அகரவீறு முதனிலைக்கேற்றவாற்றல் அக்காலத்திற்குரிய இடைநிலையைப் பெற்று அன்சாரியை பெற்றும் பெருதும் முடிந்தாற் போன்று, எதிர்காலத்தும் முதனிலைக் கேற்றவாற்ருல் அக்காலத்திற்குரிய இடைநிலையைப் பெற்று அன்சாரியை பெற்றும் பெருதும் முடி யும். எதிர்காலத்திற்குரிய இடைநிலைகளாவன பகரவொற்றும் வகரவொற்றுமாம். அவற்றுள் பகர விடைநிலைபெற்று அன் பெற்றும் பெருதும் முடிவுழி உண்பன, உண்ப எனவரும். வகர விடைநிலை பெற்று அவ்வாறு முடிவுழி வருவன, வருவ, செல் வன, செல்வ எனவரும். இங்ங்னம் முதனிலைக் கேற்றவாற்றல் இடைநிலை வேறுபடாது அன்சாரியையின்றி உண்குவ, தின் குவ எனக் குகரச் சாரியை பெற்று. வருவன வகர வீருகக்