பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 (இ-ள்) மன் என்னும் இடைச்சொல் கழிவு குறித்து நிற்பதும் ஆக்கம் குறித்து நிற்பதும் ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பதும் என மூன்ரும். எ-று. கழிவு என்பது பயனின்றிக் கழிந்ததற்கு இரங்குதலாகும். ஆக்கம் என்பது, முன்னே நிலையினும் மிக்குளதாதல் . ஒழியிசை என்பது சொல்லாதொழிந்து நின்ற சொற்களின் பொருளைத் தந்து நிற்றல். (உ-ம்) சிறியகட் பெறினே எமக்கீயுமன்னே? என்புழி மன்னச்சொல் அதுகழிந்தது? என்னும் பொருள் குறித்து நின்றது. பண்டு காடுமன், இன்று கயல் பிறழும் வயலா யிற்று என்புழி மன் ஆக்கங்குறித்து நின்றது. கூரியதோர் வாள்மன் 22 என்புழி மன் என்பது திட்பமின்று. எனவோ இலக்கணமின்று. எனவே எச்சமாய் ஒழிந்த சொற்பொருண் மையினே நோக்கி நின்றது. மன்னென்னும் இடைச்சொல் மேற்குறித்த மூவகைப் பொருளோடு அசைநிலையாகவும், மிகுதி, நிலேபேறு என்னும் பொருள் குறித்தும் இலக்கியங்களிற் பயிலக்கண்ட பவணந்தி முனிவர், 431. மன்னே ய ைசநிலை யொழியிசை யாக்கம் கழிவு மிகுதி நிலைபே ருகும். எனச் சூத்திரஞ் செய்தார். மேன் என்னும் இடைச்சொல் அசைநிலே, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி, நிலேபேறு என்னும் ஆறுபொருளிலும் வரும் என்பதாம். (உ-ம்) அதுமற் கொண்கன்தேரே! என்பது அசைநிலே. 'எந்தை எமக்கருளுமன் என்புழி மிகுதியும் அருளும்? எனப் பொருள் தந்து நிற்றலின் மன்மிகுதிப் பொருளில் வந்தது. 'மன்ன வுலகத்து மன்னியது புரிமே? என்புழி மன் நிலைபேறு என்னும் பொருளில் வந்தது.