பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 (உ.ம்) கொன்முனே யிரவூர் போலச் சிலவாகுக நீ வாழு நாளே: என்புழி, கொன்முனையிரவூர் என்புழி அஞ்சிவாழும் ஊர் என அச்சப் பொருளிலும், கொன்னே கழிந்தன்று இளமை என் புழிப் பயனின்றிக் கழிந்தது இளமை’ எனப் பயனின்மைப் பொருளிலும், கொன் வரல்வாடை, ! என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனக் காலப்பொருளிலும், கொன்னூர் துஞ்சினும் என்புழிப் பேரூர் துஞ்சினும் எனப் பெருமைப் பொருளிலும் கொன் என்னும் இடைச்சொல் வந்தது. கொன் என்னும் இடைச்சொல் சுருக்க நூலாகிய நன்னூ லில் இடம்பெற்றிலது. உடுடு. எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் றப்பா லெட்டே யும்மைச் சொல்லே. இதுவும் அது. (இ-ஸ்)உம் என்னும் இடைச்சொல் எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள் குறித்து வருதல் பற்றி எட்டாம். எ-று. தன்னயொழிந்த பொருளேக் குறித்து நிற்பது எச்சமாகும். அஃது இறந்தது தழீஇயது எதிரது.தழி இயது என இருவகைப் படும். சிறப்பு-மிகுதி. அஃது உயர்பில்ை மிகுதலும் இழிபில்ை மிகுதலும் என இருவகைப்படும். ஐயம்-ஐயப்பட்ட பொருண்மை குறித்துவருவது. யாதானும் ஒரு தொழில் எதிர்மறுத்துத் தொழிற் கண் வருவது எதிர்மறையாகும். மற்றெதனையும் நோக்காது முற்றி நிற்பது முற்ருகும். பலபொருளே எண்ணுதல் குறித்து வரு வது எண் எனப்படும். ஒரு பொருளே ஐயப்படுதலும் துணிதலு மின்றி ஆராயும் நிலமைக்கண் வருவது தெரிநிலை எனப்படும். மேல் ஆகும் நிலமையைக் குறித்து வருவது ஆக்கமாகும். இவ்வெண்வகைப் பொருள்களிலும் உம்மையிடைச்சொல் வரும் என்பதாம்.