பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 உடுசு. பிரிநிலை வினுவே யெதிர்மறை யொழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப வோகா ரம்மே. இதுவும் அது. (இ-ள்) பிரிநிலே, வின, எதிர்மறை, ஒழியிசை, தெரி நிலே என்னும் இப்பொருள்களே மிகுதி என்னும் பொருளுடன் சேர்த்து ஒகாரவிடைச் சொல்லின் பொருண்மை ஆரும் என்பர் ஆசிரியர். எ-று . பிறபொருளினின்றும் பிரித்தமை தோன்றவருவது பிரிநிலை யெனப்படும். வினவுதற் பொருளில் வருவது வினவாகும். உ-ம். யானே தேறேன் அவர் பொய் வழங்கலரே என் புழி ஒகாரம் தேறுவார் பிறரினின்றும் தன்னைப் பிரித்தலின் பிரி நிலே யோகாரமாகும். சாத்தன் உண்டானே? என்புழி ஒகாரம் வினப்பொருளில் வந்தது. யானே கொள்வேன்? என்புழி ஒகாரம், யான் கொள்ளேன் என எதிர்மற்ை குறித்து நின்றது. கொளலோ கொண்டான். என்புழி ஒகாரம், கொண்டுய்யப் போயினுன் அல்லன் என்பது முதலாய ஒழிந்த சொற்களை நோக்கி நிற்ற லின் ஒழியிசை யோகாரமாகும். திருமகளோ அல்லள், அரமகளோ அல்லள் இவள்யார்? என்புழி ஒகாரம் ஐயப் பொருள் குறியாது தெரிந்து ஆராய்தற்கண் வருதலின் தெரி நிலே ேயாகாரமாகும். ஒஒ பெரியன்’ என்புழி ஒகாரம் பெருமை யின் மிகுதி குறித்து நிற்றலின் சிறப்போகாரமாகும். ஐயமென் னும் ஒகாரம் தெரிநிலேக்கண் அடங்கும் என்பர் தெய்வச்சிலே 让蚤”重”。 ஒகாரவிடைச் சொற்குத் தொல்காப்பியனர் கூறிய மேற் குறித்த ஆறுபொருள்களுடன் கழிவும் அசைநிலையும் என்னும் இரண்டினையும் சேர்த்து எட்டாகக்கொண்டு, 422. ஒழியிசை வினுச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலேபிரிப் பென வெட் டோவே. எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர்.