பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 (உ-ம்) கண்டிகு மல்லமோ (ஐங்குறு.121) எனவும், சாந்தஞெகிழிகாட்டி, ஈங்காகியவால் என்றிசின்யானே? (நற். 55) எனவும், அளிதோதானேயது பெறலங்குரைத்தே (புறம்5) எனவும், நனவென்றெழுந்திருந்தேன். (முத்தொள்) எனவும், நெஞ்சம் பிளந்திட்டு (கலி.101) எனவும், தேவாதி தேவனவன் சேவடி சேர்துமன்றே: (சீவக-1) எனவும், பணி யுமாம் என்றும் பெருமை (திருக்.978) எனவும், அவர்தாம் வந்தார் எனவும், நீதா ன் பெரியை’ எனவும், ஆசைப்பட்டி ருக்கின்றேனே. (சீவக-1487) எனவும், ஊரினின்று வந்தார்: எனவும் இகும் முதலியன அசைநிலையாய் வந்தவாறு காண்க. உஅம். ஆக வாக லென்ப தென்னும் ஆவயின் மூன்றும் பிரிவி லசைநிலே. இது, பிரிவிலசைநிலேயாவன இவையெனக் கூறுகின்றது . (இ-ள்) ஆக, ஆகல், என்பது என்னும் மூன்றிடைச் சொல்லும் கூறுங்கால் பிரிவின்றி (இரட்டித்து) நிற்கும் அசைநிலே களாம். எ-று. பிரிவிலசைநிலை எனவே இவை தனித்து நின்று அசை நிலை யாகா என்பதாம். ஒருவன் மற்றவனே நோக்கி யான் இது செய்தேன்? என்ருே 'அவன் இது செய்தா ன், என்ருே நீ இது செய்தாய்’ என்ருே கூறிய போது அதனைக்கேட்கும் மற்றவன், ஆக ஆக, ஆகல் ஆகல்’ என்று கூறுதல் உலகியல். இவை அவன் கூறுவதனை உடம்படாமைக் கண்ணும் அதன்கன் தனக்கு விருப்ப மில்லாத நிலேயிலும் வரும் சொற்களாகும். இவ்வாறே ஒருவன் ஒன்றைக் கூறக்கேட்ட மற்றவன் என்பது என்பது? எனக்கூறுதலுண்டு. இக் கூற்று அவன் கூறியதனே நன்கென்று பாராட்டுதற்கண்ணும் தீதென்று இழித்தற்கண்ணும் நிகழும் எனவும் இவ்வாறு வரும் அசைநிலேக் குறிப்பினை வழக்கு நோக்கியுணர்ந்து கொள்ளுதல் வேண்டும் எனவும் குறிப்பிடுவர் சேனவரையர். உஅக. ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே ஆயிய னிலையுங் காலத் தானும்