பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 இசை குறிப்புப் பண் பென்னும் பொருட்கு உரியவாய் வருத லேயாம் எனவும் விளக்குவர் சேனவரையர். கறுப்பு, தவ என்னும் உரிச்சொற்கள் முறையே பெயரா யும் வினையாயும் தம்முருபு தடுமாறின. துவைத்தல், துவைக் கும் என்பன முறையே பெயர்க்கும் வினைக்கும் முதனிலேயாயின. இத்தொல்காப்பிய நூற்பாவையும் இதற்கு உரையாசிரியர் கள் கூறிய விளக்கங்களையும் அடியொற்றிச் சுருக்கமும் தெளிவும் பொருந்த உரிச்சொற்கு இலக்கணங் கூறுவது, 441. பல்வகைப் பண்பும் பகர் பெய ராகி ஒருகுணம் பல குணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பலவேறு வகைப்பட்ட பண்புகளையும் அறிவிக்கும் பெயர்ச்சொல்லாகி, ஒரு குணத்திற்கே யுரியனவாயும் பல குணத்திற்கே யுரியனவாயும், ஏஇனப் பெயர்ச் சொல்லேயும் வினைச்சொல்லேயும் நீங்காதனவாய்ச் செய்யுட்கு உரியவாய் வரும் கிழமையுடையன உரிச்சொல்லாம்: என்பது இதன் பொருளாகும். தொல்காப்பியர், இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றி. எனக் குறித்த உரிச்சொல்லின் இயல்பினையே 'பல்வகைப் பண்பும் பகர்பெயராகி” என்ற தொடரிற் குறித் தார் பவணந்திமுனிவர். இசை.ஒசை. குறிப்பு-மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு-பொறிகளால் உணரப்படும் குணம். குணப்பண்பும் தொழிற் பண்பும் பொருள் எனவும் படும். ஆதலின் அவற்றை உணர்த்தும் உரிச்சொல்லும் பெயர்ச் சொல்லாம் என்பார், பல்வகைப் பண்பும் பகர் பெயராகி என்றர். ஒருசொல் ஒரு குணத்தை யுணர்த்தலே யன்றி ஒருசொல் பல குணத்தையும் பலசொல் ஒரு குணத்தை யும் உணர்த்திவருதல் உண்டென்பார், ஒருகுணம் பலகுணந் தழுவி என்ருர். இவையும் பண்புப் பெயராயினும் ஏனைப்