பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 யெச்சம். குறித்தல்-கருதி நோக்குதல். பெறப்படுதல்-செவிப் புலனுகிய சொல் கருவியாக உள்ளத்திற் புலனுதல் , செவிப் புலகிைய சொல்லேயொழிந்து கட்பொறி மாத்திரையின் இரு திணை ஐம்பாற் பொருள்களே ஒருவன் உணரும்.உணர்ச்சி விலங்குணர்ச்சி போல்வதன்றி அது பொருட் பேருகாதென்பது கருத்து. தன்மை முன்னிலேகளின் ஒருமைப் பன்மைப்பாலே பெறப்படும் என்ற தல்ை அவ்விடங்களில் ஆண் பெண் பலர் ஒன்று பல என்னும் பால் விகற்பந் தோன்ரு என்பது புலம்ை. மூவிடங்களில் ஒன்றற்குரிய வினே முற்றும் பெயரும் தம்மையும் பொருளேயும் உணர்த்துமாறு இவ்வாறெனவே, இவ்விட்ங் கட்குப் பொதுவாகிய வினைமுற்றுக்களும் பெயர்களும் பெயரெச்ச வினையெச்சங்களும் வினைத்தொகை முதலிய தொகைச் சொற் களும் இடைச்சொல் உரிச்சொற்களும் முன்னும் பின்னும் தம்மை யடுத்துள்ள நிலேமொழி வருமொழிகளோடு கூடிப்பொதுமை நீங்கி ஓரிடத்திற்குரிய வாகி இவ்வாறு தம்மையும் பொருளே யும் உணர்த்தும் என்பதாம். இவ்வாறு எல்லாச் சொல்லேயும் வினைமுற்றுள்ளும் பெயருள்ளும் அடக்கி மூவகையிடத்தும் நின்ற சொல் இருதிணை ஐம்பாற் பொருளையும் தன்னையும் உணர்த்துஞ் சிறப்புவிதியினை நன்னூலாசிரியர் இச்சூத்திரத் தர்ற் கூறி யுள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும். மிக வினையிற் ருேன்றும் பாலறி கிளவியும் பெயரிற் ருேன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே, இது, மேற்குறித்த இருதினேஐம்பால் இயல்நெறியினின்றும் சொற்கள் வழுவாமற் காக்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (மேற்குறித்த பதினேரீற்றவாய்) வினைபற்றி வரும் பாலறி சொல்லும் (அவன், அவள், அவர், அது, அவை என்பன முதலாகப்) பெயர்பற்றி வரும் பாலறி சொல்லும் தம்முள் தொடருங்கால் ஒரு பாற்சொல் ஏனைப் பாற்சொல் லொடு மயங்கா; தம்பாற் சொல்லொடு தொடரும். எ-று. (உ-ம்) உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது. அது, உண்டன அவை எனத் தம்மரபின் வழுவாது வந்தமை காண்க.