பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 பயிலப்படாத உரிச்சொல்லே இவ்வியலில் எடுத்துரைக்கப்படும் என ஆசிரியர் வரையறை செய்து கொண்டவாறு, மேல என்பது மேன எனத் திரிந்து நின்றது. பொருள் வெளிப்பட வாரா உரிச்சொற்களேப் பின்வரும் நூற்பாக்களில் ஆசிரியர் கிளந்தோதி விரிக்கின்ருர், உகக. அவைதாம், உறுதவ நனியென வரூஉ மூன்றும் மிகுதி செய்யும் பொருள வென்ப. இது, குறிப்புப்பற்றி வரும் உரிச்சொல் பொருள்படுமாறு கூறு கின்றது. (இ.ஸ்) வெளிப்பட வாரா உரிச்சொற்கள்தாம், உறு, தவ, நனி எனவரும் மூன்று சொற்களும் மிகுதி என்னும் சொல்லுணர்த்தும் குறிப்புப் பொருளேயுடையவென்று கூறுவர் ஆசிரியர். எ- ) . குறிப்புப் பொருள்பற்றிய உரிச்சொல்லின் பரப்பு நோக்கி அவற்றை முற்கூறினர். (உ.ம்) உறுபுனல் தந்து உலகூட்டி’ எனவும், ஈயாது வியும் உயிர் தவப்பலவே? எனவும் வந்து நனி வருந்தினை வாழியென் னெஞ்சே எனவும் உறு, தவ, நனி என்னும் மூன்று சொற்களும் மிகுதியென்னுங் குறிப்புப் பொருளுணர்த் தின . இம்மூன்றுடன் சால என்பதனையும், உள்ளது சிறத்தல் என்னும் பொருளுடைய கூர்ப்பு கழிவு என்னும் சொற்களையும் وسواناتة 455. சால வுறுதவ நனிகூர் கழிமிகல், எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். 'சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு சொற்களும் மிகுதி என்னும் பண்பை விளக்கும் உரிச்சொற்களாம்?’ என்பது இதன் பொரு ளாகும் .