பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 278, பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத்தானும் இ ையவன வடசொல். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொதுவான எழுத்தாலும் ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்தாலும் இவ்விருவகை எழுத்தி லுைம் தமிழொலிக்கு இயைந்தனவாய் வருவன வடசொல் லாம் என்பது இதன்பொருள். இயைந்தன. என்ற சொல்லால் தொல்காப்பியர் சுட்டிய பொருளை இயைவன’ எனப் பவணந்தி முனிவரும் குறித் துள்ளமை காண்க. ஈண்டு இயைதல் என்றது தமிழொலியுடன் பொருந்திவருதலே. தமிழொலிக்கு இயையாத வட மொழிச் சொற்களைத் தமிழுக்கு இயையத் திரித்து வழங்கும் முறை யினைப் பவணந்தி முனிவர் பதவியலில் 19 முதல் 22 முடிய வுள்ள சூத்திரங்களில் விரித்துக் கூறியுள்ளமை இங்கு நினைத்தற் குரியதாகும். (உ.ம்) அமலம், உருவம், கமலம் என்றற்ருெடக்கத்தன பொதுவெழுத்தான் இயன்றன. சுகி, போகி, சுத்தி என்பன சிறப்பெழுத்துத் திரிந்து வந்தன. அரன், அரி, கடினம், சலம் என்பன பொதுவும் சிறப்புமாகிய இருவகை யெழுத்தா லும் இயன்று தமிழுக்கேற்பத் திரிந்தன. சளங். அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலே வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலும் * می تیم تیر ۶ی நீட்டும்வழி நீட் டலுங் குறுக்கும்வழிக் - குறுக்கலும் நாட்டல் வலிய வென்மனுர் புலவர். இது, செய்யுள் விகாரம் ஆமாறு கூறுகின்றது.