பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393 営 அலேப்பான் பிறிதுயிரை யாக்கலும் குற்றம் விலேப்பாலிற் கொண்டுன் மிசைதலுங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலேப்பாலுங் குற்றமேயாம்? (நான்மணி-26) என அடிதோறும் பொருள் முடிந்து வருவதனை ஆற்று நீர்ப் பொருள் கோளுக்கு உதாரணமாகக் காட்டினர் மயிலைநாதர். யாற்று நீரொழுக்குக்கு இடையறுதலின்மையானும் அற்றதேல் அதனை ஒழுக்கென்றல் கூடாமையானும், அடிதொறும் பொருள் அற்றற்று ஒழுகுதலாவது மொழிமாற்றுப்போலப் பிறழ்ந்து செல்லுஞ் செல வற்று இடையருதொழுகும் யாற்று நீரொழுக்குப் போன்று ஆங்காங்கமைந் தொழுகுதல் எனக்கூறி, சொல்லருஞ் சூற்ப்சும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போல் தலே நிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே: எனவரும் சீவகசிந்தாமணிப் பாடலே உதாரணங் காட்டுவர் சிவஞானமுனிவர். பூட்டுவிற் பொருள்கோளின் இலக்கணம் உணர்த்துவது, 414. எழுவா யிறுதி நிலேமொழி தம்முட் பொருள் நோக்குடையது பூட்டு வில்லாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும்.

  • பாவின் முதலினும் ஈற்றினும் நின்ற மொழிகள் தம்மிற்

பொருள் நோக்கி நிற்பது பூட்டுவிற் பொருள்கோளாம். என் பது இதன் பொருள். (உ-ம்). திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம்-உறந்தையர்கோன் தண்ணுர மார்பிற் றமிழ்நர் பெருமானக் கண்ணுரக் காணக் கதவு? என்புழி ஈற்றில் நின்ற கதவு என்னும் சொல் முதற்கண் நின்ற 'திறந்திடுமின் என்ற சொல்லுடன் பொருள் நோக்கமுடைய