பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 அம்மொழியமைப்பு விளங்க இன்னது இது?’ என அடை மொழி புணர்த்துக் கூறினர். எனவே கரும் பார்ப்பான், கரும் பார்ப்பனி, கரும் பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரை கள் எனப் பண்புணர்த்தும் ஈறுகள் தொக்கனவற்றை விரிப்புழிக் கரியணுகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் என இவ்வாறு ஐம்பாலிறுகளையும் விரித்துரைப்பர், இளம்பூரணர், நச்சினர்க்கினியர், தெய்வச்சிலேயர் ஆகிய உரையாசிரியர்கள். கரியன், செய்யன், கருமை, செம்மை என்பனவற்றிற் கெல்லாம் முதனிலையாய்ச் சொல் நிரம்பாது கரு. செவ்: எனப் பண்பு மாத்திரம் உணர்த்திநிற்கும் பண்புச்சொற்கள் பெயருடன் தொக்குப் பண்புடைப் பொருளாகிய பண்பினையே குறித்தலால் இரு சொல்லும் ஒரு பொருளவாய் இன்னது இது: என ஒன்றையொன்று பொதுமை நீக்கிவரும் என்பர் சேவைரையர், இன்னது இதுவென வரூஉம் இயற்கை என்ன கிளவியும் பண்பின் தொகையே? என ஆசிரியர் குறித்தமையால் பண்பு தொகாது இன்னது இதுவெனப்பட வேழக்கரும்பு, கேழற் பன்றி, சாரைப்பாம்பு எனப் பெயர் தொக்கனவும் பண்புத் தொகையாதல் கொள்ளப்படும். குணப் பெயரொடு குணிப்பெயர் புணருங்கால் அக்குணி யோடு குணத்துக்கு உண்டாகிய ஒற்றுமையினே விளக்குதற்கு வரும் ஆகிய என்னும் மொழியாகிய பண்புருபு தொக்கு நிற்பனவும், அப்பண்புருபு தொக்கு நிற்பப் பொதுப்பெயரும் சிறப்புப் பெயருமாய் ஒருபொருட்கு இருபெயர் ஒட்டிநிற்பன வும் ஆகிய இவ்விரண்டும் பண்புத்தொகையாம் என்பர் பவணந்தி முனிவர். 364. பண்பை விளக்கு மொழிதொக் கனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை. என்பது நன்னூல்.

  • பொருளின் கண் அமைந்த குணத்தைக் காட்டுதற்கு ஆண்டுவரும் பண்புருபு தொக்கு நிற்பனவும், ஒருபொருட்கு