பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 சங்ங். பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. இது பெயரெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ.ஸ்) பெயரெச்சம் பெயரொடு முடியும். எ-று. (உ-ம்) உண்னுஞ் சாத்தன்; உண்ட சாத்தன் என வரும் . சங்ச ஒழியிசை யெச்சம் ஒழியிசை முடியின. இஃது ஒழியிசை யெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ.ஸ்) ஒழியிசை யெச்சம் ஒழிந்து நின்ற பொருளாகிய எச்சத்தினேக் கொண்டு முடியும். எ-று, மன்னை ஒழியிசையும் தில்லையொழியிசையும் ஒகாரவொழி யிசையும் என ஒழியிசை மூன்ருகும். (உ-ம்) கூரிய தோர் வாண்மன்; வருக தில்லம்ம வெஞ்சேரி சேர, கொளலோ கொண்டான்: என்னும் ஒழி யிசையெச்சம் முறையே திட்பமின்று வந்தால் இன்னது செய்வல், கொண்டுய்யப் போமாறறிந்திலன் எனத் தத்தம் ஒழியிசைப்பொருள் கொண்டு முடிந்தன. சங்டு. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடியின. இஃது எதிர்மறை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) மாறுகொளெச்சம் எனப்பட்ட ஏகாரவெதிர்மறை யும் ஒகாரவெதிர்மறையும் உம்மையெதிர்மறையும் ஆகிய எதிர் மறை யெச்சம் மூன்றும் எதிர்மறைப் பொருளே யுணர்த்தும் சொற்கொண்டு முடியும். எ-று. (உ-ம்) யானே கொள்வேன்; யானே கள்வேன், வரலும் உரியன்’ என்னும் எதிர்மறை யெச்சங்கள் முறையே கொள்ளேன்; கள்ளேன், வாராமையும் உரியன் என எதிர் மறைச் சொற்கொண்டு முடிந்தன. 27