பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தென்று துணிந்த பொருள்மேல் அல்லாத தன்மையை வைத் தும் சொல்லுவர் ஆசிரியர்?’ என்பது இதன் பொருளாகும். (உ-ம்) குற்றியோ மகனே எனத்திணையையந் தோன்றிய வழிக் குற்றியோ மகனே அங்ங்னந் தோன்ரு நின்றதுதோன்ற நின்ருன் எனச் சிறப்புச் சொல்லாற் கூறின் தி இண வழுவும் விவைழுவுமாம். அவையொழித்துக் குற்றியோ மகனே அங்கனம் தோன்ரு நின்றவுருவு எனப்பொதுச் சொல்லாற் கூறுக அஃறிணையாகிய குற்றிக்கும் உயர்திணையாகிய மகனுக் கும் உருவு பொதுப்பட நின்றமையின் பொதுச்சொல்லாய் வழா நிலையாயிற்று. ஆண் மகனே பெண் மகளோ என உயர் திணைப் பாலையந் தோன்றியவழி ஆண் மகனே பெண் மகளோ அங்ங்ணத் தோன்ரு நின்றன்-தோன்ரு நின்ருள் எனச் சிறப் புச் சொல்லாற் கூறிற் பர்ல் வழுவும் விவைழுவுமாம். அவை யொழித்து ஆண்மகனே பெண்மகளோ அங்ஙனந் தோன்ரு நின்றர் எனப் பொதுச் சொல்லாற் கூறுக, ஆண் பெண் இரண்டல்லது பலர் பால் என வேறென்றின்மையின் தோன்ரு நின்றர் என்பது அவ்விரு பாற்கும் பொதுச் சொல்லாய் வழா நிலேயாயிற்று. ஒன்ருே பலவோ என அஃறிணைப் பாலையந் தோன்றிய வழி ஒன்ருே பலவோ இச்செய்புக்கது- புக்கன, எனச் சிறப்புச் சொல்லாற் கூறிற் பால்வழுவும் வினவழுவுமாம். அவையொழித்து ஒன்ருே பலவோ இச் செய்புக்க பெற்றம்: எனப்பொதுச் சொல்லாற் கூறுக. மெய்தெரி பொருளாவது ஐயத்தினிங்கி இதுவெனத் துணிந்த பொருளாகும். குற்றியோ மகனே என ஐயந்தோன்றிய நிலையில் மெய்தெரிந்த பொருள் குற்றியெனின் மகனன்று: எனவும், மகனெனிற் குற்றியல்லன் எனவும், கூறுக. ஆண்மகனே பெண்மகளோ என ஐயுற்ற நிலையில் துணிந்தபொருள் ஆண் மகன் எனிற் பெண்மகளல்லன்' எனவும், பெண்மகளெனின் ஆண்மகனல்லள் எனவும் கூறுக, மெய் தெரியாப் பொருண் மேல் அல்லாத தன்மையினை வைத்து மகனல்லன் குற்றி: எனின் குற்றியென்னும் பயனிலைக்கு எழுவாய்தந்து மகனல்லன் அவ்வுருக் குற்றி எனக் கூறல் வேண்டும். அங்ங்னம் கூறவே சொற்பல்குதல் என்னும் விடை வழுவாம். அவ்வழு வாராது