பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 லுைம் தொழிலினலும் பிரிபவை எனப்பட்டவை, இருதினே யிலும் ஆண் பெண் இருபால்களுள் பெண்ணுெழி மிகுசொல்லும் ஆணுெழி மிகுசொல்லும் என இருவகைப்படும். பெருந்தேவி கருவுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் பணிமக்கள் உளர் என்புழி மக்கள் என்பது பெயரிற் பிரிந்த ஆணுெழி மிகுசொல். திருத ராட்டிரன் மக்கள் நூற்றுவரையுடையன் என்புழி மக்கள் என் பது பெயரிற் பிரிந்த பெண்ணுெழி மிகுசொல். பதின்மர் இவ் வயலிற் களேபறித்தார் என்புழிக் களைபறித்தார் என்பது தொழி லிற் பிரிந்த ஆணுெழிமிகுசொல். பதின்மர் இவ்வயலில் உழுதார் என்புழி உழுதார் என்பது தொழிலிற் பிரிந்த பெண் ணுெழி மிகுசொல். இவை உயர்திணைக்கண் பெயரினும் தொழி லினும் பிரிந்தன. இவ்வேந்தன் ஆயிரம் யானையுடையன் என்புழி யானை என்பது பெயரிற் பிரிந்த பெண்ணுெழி மிகு சொல். கண்ணன் நூறு எருமையுடையன் என்புழி எருமை என்பது பெயரிற் பிரிந்த ஆணுெழி மிகுசொல். இப்பெற்றம் உழுதன என்புழி உழுதன என்பது தொழிலிற் பிரிந்த பெண் ணுெழி மிகுசொல். இப்பெற்றம் நிற்ையக் கறக்கும் என்புழிக் கறக்கும் என்பது தொழிலிற் பிரிந்த ஆணுெழி மிகுசொல். இவை அஃறிணைக்கண் பெயரினும் தொழிலினும் பிரிந்தன. இங்குக் காட்டப்பட்ட பெயரும் தொழிலும் ஆண் பெண் இருபாற்கும் பொதுவாயினும் இவை பிறசொல்லானன்றித் தாமே பிரிந்து குறிப்பினன் ஒருபாற்கண் வழங்குதல் உலகவழக்கிற் காணப் படுதலின் மயங்கல் கூடா வழக்கு வழிப்பட்டன. என்ருர் ஆசிரியர். இத்தொல்காப்பிய நூற்பாவின் பொருளே விளக்கும் முறை யில் அமைந்தது, 351. இருதினை யாண்பெணு ளொன்றனே யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி குனே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். உயர்திணை அஃறிணை என்னும் இருதினையிலும் ஆண் பெண் இருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் அவ்விருபாலுள் ஒருபாலேக் குறிப்பில்ை ஒழிக்கும்?? என்பது இதன் பொருளாகும்.