பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*密 கன்று என்பது ஆவின் கன்று, எருமைக் கன்று, தென்னங் கன்று முதலியவற்றைக் குறித்து வழங்கும் பல பொருளொரு சொல்லாகும். கன்று நீருட்டுக என்றவிடத்து ஆவின்கன்று எருமைக்கன்று தென்னங்கன்று என்பன ஆங்குள வாயின் கேட்டார் இன்ன கன்று என்பதனை அறியவியலாத ஆராய்ச்சி நிலையில் இன்ன கன்று என அடைமொழியுடன் இயைத்து எடுத்துக் கூறுதல் வேண்டும் என்பதாம். நினையுங்காலே என்பதல்ை கேட்டார் நினேய வேண்டாத தெளிவு நிலையில் கிளந்தோதுதல் வேண்டா என்பதாம். நினைதல்-ஆராய்தல், 'கன்ருற்றுப் படுத்த புன்றலைச் சிருர் : என்றவழிக் கிளத்தல் வேண்டாவாயினவாறு காண்க. ஆங்கு என்பது உரையசை . இனி இச்சூத்திரத்தினை மேலேச் சூத்திரத்தோடு இணைத்து ஒரு சூத்திரமாக்கி, வினைவேறுபடும் பல பொருளொரு சொல்லாகிய மா? என்பதுதானே வீழ்ந்தது? என்னும் பொதுவினை கொண்டவழி வினே வேறுபடாப் பல பொருளொரு சொல்லாம் எனவும், அதனை விளங்கக் கூறுதல் வேண்டின் மாமரம் வீழ்ந்தது எனக் கிளந்து கூறுதல் வேண்டும் எனவும் இச் சூத்திரத்துக்குச் சேவைரையர் கூறும் உரை, வினே வேறு படாப் பல பொருளொரு சொல் என்பதொன்று இல்லை எனப் பட்டு ஆயிரு வகைய பல பொருளொரு தொல் (தொல்கிளவி-டுஉ) என்னும் ஆசிரியர் கூற்ருெடு மாறுபடும் என மறுப்பர் நச்சினர்க்கினியர். இங்ங்ணம் வினையினுலும் சார்பினுலும் இனத்தினுலும் இடத்தி லுைம் பொதுமை நீங்காப் பலபொரு ளொருசொற்களே அவற் றிற்கேற்ற சிறப்பொடுங் கூட்டிச் சொல்லுதல் வேண்டும் என அறிவுறுத்தும் இம் மூன்று குத்திரப் பொருள்களையும் ஒரு சேரத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 389. வினே சார் பினமிட மேவி விளங்காப் பலபொரு ளொருசொற் பணிப்பர் சிறப்படுத்தே. என வரும் நன்னூற் சூத்திரமாகும்.