பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛岛岛_ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

சோற்றுநிலையும், மேற்சென்றுபொரும் போரில் வென்றார்க்கு உளதாகிய ஒளியென்னும் புகழ் விளக்கமும், போரில் தொல்வியுற் றோர் புகழென்னும் ஒளிகுன்றித் தேய்தலும், எக்காலத்தும் குறைதல் இல்லாத வென்றிச் சிறப்பினைப் பெறுதலாகிய கொற்ற வள்ளையும், போர்முனையின் அழிவினைச் செய்யும் படைக்கலங் களைத் தடுத்து மெலிவுற்றாரைப் பேணித் தழுவிக் கொள்ளு தலாகிய தழிஞ்சி என்னுந்துறையொடு மிக்க பெருஞ்சிறப்பினை யுடைய பதின்மூன்று துறைகளையுடையது வஞ்சித்திணையாகும்.

இச்சூத்திரத்தில் 'பெருமையானும் என்பது முதலாக வந்த 'ஆன் என்னும் இடைச்சொற்கள் ஏதுப்பொருளுணர்த்தும் உருபா காது எண்ணும்மையுடன் இசைந்து அசைநிலையாய் நின்றன. இயங்குபடையரவம், எரிபரந்தெடுத்தல் என்பவற்றின்கண் எண் ணும்மை தொக்கு நின்றது. பகைவரைப் பொருது அழித்தல் வேண்டிச் சினமிக்கு மேற்செல்லும் வஞ்சி மறவரால் எழுப்பப்படும் ஆரவாரம் பகைவர்க்கு அச்சத்தை விளைப்பதாகலின் அதனை 'இயங்குபடையரவம் என்றார். இவ்வாறன்றி வெட்சி மறவர் நள்ளிரவிற் களவினாற் பகைவர் நாட்டு ஆனிரைகளைக் கவர்தற் பொருட்டு மறைந்து இயங்கும்போது உண்டாகும் ஓசை தன்னி யல்பில் எழுவது ஆதலின் படையியங்கு அரவம்’ எனப்பட்டது. எனவே இயங்கும் படைவீரர்களால் எழுப்பப்படுவதும், படை யியங்கும்போது தன்னியல் எழுதுவதும் ஆகிய இவ்வேறுபாடு குறித்து இவ்விரண்டும் இருவேறு திணைக்குரிய இருவேறு துறை களாயின. வஞ்சித்திணையில் வரும் இயங்கு படையரவம் என்ற இத்துறையினை வஞ்சியரவம் என்ற பெயராற் குறிப்பிடுவர் ஐயனாரிதனார்.

எரிபரந்தெடுத்தல் என்றது பகைவர் நாட்டினைத் தீக்கொளு வுதலாகும். இதனை உழுபுலவஞ்சி, பெருவஞ்சி என்னும் இரு துறைகளாற் குறிப்பிடுவர் ஐயனாரிதனார். படையுடன் மேற் சென்றோர் பகைவரது நாட்டின் எல்லையிலே பேராற்றலுடன் போர் செய்து விளங்குந் திறத்தினைக் குறிப்பது வயங்கல் எய்திய பெருமை என்ற துறையாகும். 'கொடுத்தலெய்திய கொடைமை' கொடைவஞ்சி எனப்படும். அடுத்துார்ந்து அட்ட கொற்றம்பகைவர் பலரையும் தொடர்ந்து மேற்சென்று கொன்ற வெற்றித் திறம். ஐயனாரிதனார் கூறும் கொற்றவஞ்சி பெயரளவில் இதனை ஒத்திருத்தல் காணலாம். மாராயம் என்பது வேந்தனாற் படைவீரர் பெறும் சிறப்பாகும். அஃதாவது ஏனாதி, காவிதி, பெருநம்பி முதலிய பட்டங்களும் பொற்பூவும் நாடும் ஊரும் அரச